திங்கள்சந்தையில் இருந்து அழகிய மண்டபம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் நேற்று சொகுசு கார் ஒன்று சென்றது. ஆலங்கோடு அரசு நடுநிலைப் பள்ளி அருகில் வைத்து எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் பள்ளி முன்பு உள்ள பயணிகள் நிழற்குடையில் மோதி நின்றது. இந்த விபத்தில் பயணிகளுக்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டிரைவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் குவிந்து அனைவரையும் மீட்டனர். காலை மாலையில் பள்ளி நேரங்களில் விபத்து ஏற்பட்டால் விபரீதம் நடக்க வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.