குழித்துறை: தடுப்பணையில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் குழித்துறை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை மீது வாகனங்கள், பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது.
இதனால் கடந்த ஒரு மாதமாக தடுப்பணை...
நித்திரவிளை: பைக்கிலிருந்து விழுந்த மெக்கானிக் உயிரிழப்பு
நித்திரவிளை அருகே உள்ள எஸ் டி மங்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (64). இவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். சம்பவ தினம் மாலையில் விஜயன் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க நடைக்காவு என்ற பகுதிக்கு மோட்டார் சைக்கிள் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென...
குளச்சல்: விசைப்படகில் தவறி விழுந்த குமரி மீனவர் மாயம்
குளச்சல் அருகே கோடிமுனை பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாசன் (45) மீன்பிடித் தொழிலாளி. இவர் கடந்த 27ஆம் தேதி கேரள மாநிலம் முனம்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஸ்ரீலால் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றார்.
கடந்த 30ஆம் தேதி கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் பலத்த...
நாகர்கோவில் அருகே நள்ளிரவில் கடையில் புகுந்து திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பேக்கரியில் நேற்று (டிச.,2) நள்ளிரவு 3 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் கடையில் புகுந்து பணத்தை திருடியுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்து கோட்டார் போலீசார் விசாரணை...
வேளிமலை: வனச்சரகம் சார்பில் கடற்கரை தூய்மை பணி
குமரி மாவட்ட வனத்துறை சார்பில் வேளிமலை வனச்சரக பணியாளர்களும், சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் சேர்ந்து வேளிமலை வனச்சரக எல்லைக்குட்பட்ட அழிக்கால் மண்டபம், லெமூர்பீச், ராஜாக்கமங்கலம் துறை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நேற்று (டிச 1-ம் தேதி) தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
பிளாஸ்டிக் பாட்டில்கள், நெகிழிகள், கண்ணாடிப் பாட்டில்கள் போன்றவை...
கொற்றிக்கோடு: பெண்ணின் கவரிங் நகை பறிப்பு
கொற்றிக்கோடு அருகே உள்ள பெருஞ்சிலம்பு பகுதி சேர்ந்தவர் அமுதா (53). நேற்று(டிச.1) மாலை தனது வீட்டருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவரை பார்த்தது சந்தேகம் அடைந்த அமுதா யாரை பார்க்க வேண்டும் என்று விசாரித்துள்ளார்.
அந்த சமயத்தில்...
கொல்லங்கோடு: காங்கிரஸ் கமிட்டி கூட்டம்; எம்.எல்.ஏ. பங்கேற்பு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம் தலைவர் பால்ராஜ் தலைமையில் இன்று (2-ம் தேதி) நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் முன்னிலையில், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கொல்லங்கோடு...
மார்த்தாண்டம்: அரசு பஸ் மோதி நிதி நிறுவன மேலாளர் பலி
மார்த்தாண்டம் அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் மகன் ஸ்ரீனிவாசன் (45). தேனி மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் (நவ.,1) தனது பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து இரவிபுதூர் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ்...
களியக்காவிளை: முதியவரை தாக்கியவருக்கு 1 வருடம் சிறை
களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் பாலையன் (68). இவர் வீட்டை ஒட்டிய பகுதியில் தொழுவம் அமைத்து பசுமாடு வளர்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மணி (53) என்பவருக்கு பாலையன் மாட்டுத் தொழுவத்திலிருந்து கழிவுநீர் பாய்ந்து செல்வதால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த...
வடசேரி பேருந்து நிலைய வாகன காப்பகத்தில் அதிக கட்டணம் வசூல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் தங்கள் இருசக்கர வாகனங்களை மாநகராட்சி மூலம் ஒப்பந்தம் இடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள காப்பகங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதற்கு இருசக்கர வாகனத்திற்கு ஒரு நாளைக்கு ரூ. 10 தலைக்கவசத்திற்கு ரூ. 5 கட்டணம் என அறிவித்துவிட்டு...












