குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அடிப்படையில் நேற்று மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசார் வெங்கணம்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது உரிய அனுமதி இன்றி செம்மண் ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வாகன ஓட்டுநர் மற்றும் சுத்தம் செய்பவர் ஆகியோர் மீது மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் பாகோடு பகுதியை சேர்ந்த அர்ஜுனன் என்பவரின் மகன் லாடு பிளசிங்(38), தங்கமணி என்பவரின் மகன் சிபின்(34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையானது வரும் நாட்களில் மேலும் தீவிர படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.