Google search engine
Home 2024

Yearly Archives: 2024

அலங்கார விளக்குகளை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சி.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த காரங்காடு பகுதியில் உள்ள புனித ஞானபிரகாசியர் தேவாலய திருவிழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. 10ம் நாள் திருவிழாவான நேற்று தேர்பவனி நடைப்பெற்றது. இந்த திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த அலங்கார விளக்குகள், சிசிடிவி கேமரா மற்றும் ஒலிப்பெருக்கியை முகமூடி அணிந்து வந்து அடித்து நொறுக்கிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறில் குழந்தையுடன் பெண் மாயம்.

நாகர்கோவில் வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் துரை. இவருடைய மனைவி பாப்பா (வயது 30). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடந்தது. தற்போது 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவத்தன்று பாப்பா குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்ப வரவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்...

சிறுவர்கள் பைக் சாகசம்; பெற்றோருக்கு தண்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், விபத்துகளை தவிர்க்கும் வகையில் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிறுவர்கள் -டூ - வீலர்கள் ஓட்டி பிடிபட்டால், அவர்கள் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வகையில், நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் பள்ளி விடும் நேரத்தில் இரண்டு சிறுவர்கள் பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்து ஓட்டி வந்தனர். நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த சிறுவர்கள், ஒழுகினசேரி மற்றும் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர்கள் என, தெரிந்தது. இருவரது தந்தையும்...

மேற்கு கரையில் காயமடைந்த பாலஸ்தீனரை ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்ற இஸ்ரேல் ராணுவம்

மேற்கு கரையில் தேடுதல் வேட்டையின்போது காயமடைந்த பாலஸ்தீனரை இஸ்ரேலிய ராணுவம் ஜீப்பில் கட்டி இழுத்துச் சென்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மனித உரிமை மீறல் என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் மீது போர் அறிவித்த இஸ்ரேல் மேற்கு கரைப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த...

பிரான்ஸில் 20 ஆண்டாக வேலை தராமலேயே சம்பளம் தரும் நிறுவனம் மீது பெண் ஊழியர் வழக்கு

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாரன்ஸ் வான் என்ற பெண் கடந்த1993-ம் ஆண்டு டெலிகாம் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.பகுதி பக்கவாதம் மற்றும் வலிப்புநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஏற்ற பணி தொடக்கத்தில் வழங்கப்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு, வேறுபகுதிக்கு பணியிடம் மாற்றம் பெற்று சென்றார். அங்கு அவருக்குஏற்ப வேலை வழங்கவில்லை. இதனிடையே 2013-ல் இந்நிறுவனம் ஆரஞ்ச் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லாரன்ஸ்வானுக்கு எந்த பணியையும் வழங்கவில்லை. இது தொடர்பாக வாசன்ஹோவ் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 20 ஆண்டுகளாக வேலை கொடுக்காமல் முழுசம்பளத்தையும்...

ரஷ்யாவில் தேவாலயம், யூத வழிபாட்டுத் தலத்தில் தாக்குதல்: 15 காவலர்கள் உள்பட பலர் பலி

ரஷ்யாவின் வடக்கு காக்கஸ் பிராந்தியத்தில் டகேஸ்டான் மாகாணத்தில் இரு நகரங்களில் தேவாலயம், மற்றும் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஒரு காவல் சோதனைச் சாவடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு மத குரு, 15 போலீஸார், பொதுமக்கள் உள்பட பலர் உயிரிழந்ததாக அப்பிராந்திய ஆளுநர் செர்கய் மெலிகோவ் தெரிவித்துள்ளார். டகேஸ்டான் மாகாணத்தில் மிகப் பெரிய நகரான மகாச்கலா மற்றும் கடற்கரை நகரான டெர்பன்ட்டில் நடந்த இத்தாக்குதலை தீவிரவாத சதி என்றும் அவர் அறிவித்துள்ளார் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் மகாச்கலாவில்...

டி20 உலகக் கோப்பையில் அரை இறுதி வாய்ப்பு யாருக்கு…?

சூப்பர் -8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ளன. இதில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிக்குச் செல்லும். தற்போது இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியின் நிகர ரன் விகிதம் 2.425-ஆக உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று 3-வதுஇடத்தில் உள்ளது. அந்த அணியின்...

நீட் விவகாரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வேடிக்கை பார்க்கிறார் பிரதமர் மோடி: பிரியங்கா காந்தி கிண்டல்

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் என்னசெய்வதென்று தெரியாமல், நடக்கும் சம்பவங்களை பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இளநிலை நீட் தேர்வு, யுஜிசி-நெட் தேர்வு முறைகேடு தொடர்பாகசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வுஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: பாஜக ஆட்சியில் ஒட்டு மொத்த கல்வி முறையும், ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியும், மாணவர்களின் எதிர்காலமும், பேராசை மற்றும் முகஸ்துதி செய்யும் திறனற்றவர்களிடம் சிக்கியுள்ளது. இதனால் வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, ஒத்திவைப்பு போன்றவை நடைபெறுகின்றன....

18-வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று தொடக்கம்: புதிய எம்.பி.க்கள் பதவியேற்கின்றனர்

நாடாளுமன்றத்தின் 18-வதுமக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 9-ம் தேதி, நாட்டின் பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் 24-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களவையின் தற்காலிக தலைவராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...

கட்சி அலுவலகத்துக்காக 42 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 33 ஆண்டுகளுக்கு குத்தகை: ஜெகன் ஆட்சியின் முறைகேடுகள் அம்பலம்

ஜெகன் ஆட்சியின் போது, தனது சொந்த கட்சி அலுவலகத்துக்காக ஆந்திர மாநிலம் முழுவதும் 26 மாவட்டங்களில் மொத்தம் 42 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, ஒவ்வொன்றும் அரண்மனை போல்கட்டப்பட்டு வருகிறது. இதற்கு மாதம் ரூ.1,000 மட்டுமே வாடகைநிர்ணயிக்கப்பட்டு 33 ஆண்டுகளுக்கு குத்தகையும் போடப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகிஉள்ளது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், கடந்த ஜெகன் ஆட்சியில் செய்த பல முறைகேடுகள் தினமும் வெளியே வந்த வண்ணம் உள்ளன. இதில்,ஜெகன் தனது ஒய்.எஸ்.ஆர்காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகங்கள் கட்ட அரசு...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி...

நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய...

பத்மநாபபுரம்: அமைச்சர் தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து...