Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மத்திய அரசு பதவியேற்ற 15 நாளில் 10 பிரச்சினைகள்: பட்டியலிட்டு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் நேற்று கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 15 நாட்கள்தான் ஆகின்றன. ஆனால் அதற்குள் நாட்டில் 10 பிரச்சினைகள் நடந்துள்ளன. 1. பயங்கரமான ரயில் விபத்து, 2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், 3. ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் அவல நிலை, 4. நீட் மருத்துவத் தேர்வு ஊழல், 5. நீட் முதுகலை தேர்வு ரத்து, 6. யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு, 7. பால், பருப்பு வகைகள், எரிவாயு,...

ரூ.1 லட்சம் பரிவர்த்தனைக்கு  ரூ.1,000 கமிஷன் பெறுவதற்காக வங்கி கணக்கை வாடகைக்கு விடும் இளைஞர்கள் @ கோவா

வேலை இல்லாத பல இளை ஞர்கள் தங்களது வங்கிக் கணக் குகளை இணைய மோசடி பேர் வழிகளுக்கு வாடகைக்கு கொடுத்து கூடுதல் பணம் சம்பாதித்து வருவது கோவா போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கிடைத்த தகவல்கள் குறித்து கோவா போலீஸார் பகிர்ந்து கொண்டதாவது: சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை குறிவைத்து கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி இணைய மோசடிக் கும்பல் அவர்களை ஏமாற்றி வருகிறது. அவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக வங்கிக் கணக்குகளை இதுபோன்ற மோசடி கும்பலுக்கு வாடகைக்கு...

அரசியல் சாசனத்துடன் வந்த எதிர்க்கட்சியினர்: அயோத்தி எம்.பி.யை பெருமையுடன் அறிமுகப்படுத்திய அகிலேஷ்

தேர்தலுக்குப் பிறகு 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், அமைச்சர்களும் பதவியேற்கும்போது ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் அரசியல் சாசனத்தை உயர்த்திக் காட்டினர். இதுகுறித்து முன்னதாக செய்தியாளர்களிடம் கூறிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனம் மீது பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு நிகழ நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம். எனவே எம்.பி.யாக...

ரூ.4,000 கோடியில் 10,000 கி.மீ. சாலை மேம்பாடு: 2 ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளதாக முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 2 ஆண்டுகளில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் 10 ஆயிரம் கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறாம். அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதையே திராவிட மாடல் அரசின் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இதில், சாலை வளர்ச்சி என்பது மிக மிக...

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் மேலும் ஏழு பேர் கைது: இதுவரை மொத்தம் 21 பேர் சிக்கினர்

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் தொடர்பாக மேலும் ஏழு பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரையில் 21 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சடையன், தேவபாண்டலம், சிவகுமார்,சென்னை, பன்சிலால்,சென்னை, கௌதம்,சென்னை,ரவி, தேவபாண்டலம், செந்தில், சேஷ சமுத்திரம், ஏழுமலை, மல்லிகைப்பாடி ஆகிய ஏழு பேரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கள்ளச் சாராயம் அருந்தி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கைதான 17 பேரில் 9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க...

“பேரவையை பொதுக்கூட்டமாக ஆக்கிவிடக் கூடாது” – அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்

சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசியதாவது: அரை நூற்றாண்டுகளாக இந்த அவையில் இருக்கிறேன். இந்த மன்றத்தின் கண்ணியம், கட்டுப்பாடு கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருவதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. பொதுக்கூட்டத்தில் பேசுவது வேறு, சட்டப்பேரவையில் பேசுவது வேறு. சட்டப்பேரவையை பொதுக்கூட்டமாக ஆக்கிவிடக்கூடாது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அமைச்சர்கள் என எல்லோருக்கும் இது பொருந்தும். பேரவைத் தலைவர் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த பேரவைத்...

கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20% வரை அதிகரிப்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

இந்த கல்வியாண்டு முதல் கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது என்று சட்டப் பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித் துறையின் அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டார். அதில், 2025-26-ம் கல்வியாண்டு முதல் அச்சு தொழில்நுட்பம் பயிலகத்தில் பொதிகட்டுதல், தோல்தொழில்நுட்ப பயிலகத்தில் காலணி, தோல் மற்றும் அலங்காரம், நெசவு தொழில்நுட்ப பயிலகத்தில் அலங்காரம், ஆடை, ஆயத்தஆடை உள்ளிட்ட 6 புதிய பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்ப...

தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கருணாநிதி பெயரில் புதிய விருது: தமிழக அரசு

தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கருணாநிதி பெயரில் ரூ.10 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கத்துடன் புதிய விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தொடர்பாக அத்துறையின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலளித்துப் பேசும்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: பிற மொழி திணிப்பால் தமிழுக்கு வந்த ஆபத்தை எதிர்த்து தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிபோர் தியாகிகளை போற்றும் வண்ணம் 2025-ம் ஆண்டு முதல் ஜனவரி 25-ம் தேதி தமிழ் மொழி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு...

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உழவாரப்பணி

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைக்கு பக்தர்கள் மஞ்சள் பொடி மற்றும் பால் ஊற்றி வழிபாடு செய்வது வழக்கம்.இந்தநிலையில் நாகராஜா கோவிலில் வடசேரி திலகவதியார் உழவாரப்பணி குழு மற்றும் தூத்துக்குடி திருதாண்டக வேந்தர் குழுவினர் இணைந்து கோவிலின் உள் சுற்று பிரகாரத்தில் உள்ள செடி, கொடி மற்றும் மணல் திட்டுகளை சரிசெய்து உழவாரப்பணி மேற்கொண்டனர். இந்த பணியினை குமரி...

நித்திரவிளையில் மதுபானம் பதுக்கி விற்றதாக 3 பேர் கைது

நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விறப்பதாக எழுந்த புகாரின் பேரில், நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் தலைமையிலான போலீசார்  திருட்டுத்தனமாக மது விற்பனை தடை செய்யும் பொருட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.   அப்போது நடைக்காவு பகுதியில் மது வைத்திருந்த ராஜேஷ் (35) என்பவரை மடக்கி பிடித்து 10  குவாட்டர் மது பாட்டில்களையும்,   எஸ்டி மங்காடு புதுக்குளம் பகுதியில் மது விற்பனைக்கைக்கு வைத்திருந்த பிஜு (41) என்பவரை படித்து 8 பாட்டில்களையும், ஆலங்கோடு பருத்தி விளை பகுதியில் மது பதுக்கிய றசல் ராஜா (...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி...

நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய...

பத்மநாபபுரம்: அமைச்சர் தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து...