Google search engine
Home 2024

Yearly Archives: 2024

பாலாற்றில் மேலும் தடுப்பணைகள் கட்டப்படும்: குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு உறுதி

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே மேலும் சில தடுப்பணைகள் கட்டப்படும் என நேற்றுமுதல்வர் சந்திரபாபு தனது தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும், தனது குப்பம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குப்பம் வந்தடைந்தார் சந்திரபாபு நாயுடு. அங்கு அவர் பேசுகையில், “என்னை9-வது முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பியதற்கு ஒவ்வொருக்கும் நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன். இந்த 5 ஆண்டுகளில் உங்களின் பிரச்சனைஅனைத்தையும் தீர்த்து வைக்கிறேன். 1994-2004...

பக்தர்கள் உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம்: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி கோயில் அர்ச்சகர் மேல்முறையீடு

கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவபிரம்மேந்திர கோயிலில் ஆண்டுதோறும் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழா நடைபெறும். இதன் நிறைவுநாளில் பக்தர்கள்உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நடைமுறைக்கு உயர் நீதிமன்றம் 2015-ல் தடை விதித்தது. இந்நிலையில், மே 18-ல்நடைபெற்ற ஆராதனை விழாவில், பக்தர்கள் உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி கோரி,கரூரைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, உண்ட இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி...

அனுமதியின்றி போராட்டம்: ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பைக் கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் ஜூன் 22-ம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காவல் துறையிடம் பாஜக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. எனினும், திட்டமிட்டபடி கடந்த22-ம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். அப்போது,போலீஸாருக்கும், கட்சியினருக்குமிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்களைக் கைது செய்த போலீஸார், மாலையில் விடுவித்தனர். இந்நிலையில், தடையை மீறி பொதுமக்கள்,...

அரசியலமைப்பு குறித்து பேச காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

நெருக்கடிநிலை கால போராட்ட வீரர்கள் சங்கம் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை பிரகடனம் குறித்த கருப்பு தின நினைவுக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: நாட்டில் 1975 ஜூன் 25-ம் தேதி அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அமலானது. எமர்ஜென்சியின் போது 21.14 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு அடக்குமுறைகளுக்கு மக்கள் உள்ளாகினர். இந்த வரலாற்றை இளைஞர்கள் உட்பட தமிழகத்தில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். முன்னாள் பிரதமர்...

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 61 ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று வரை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மொத்தம் 220 பேர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று வரை 59 பேர் உயிரிழந்த நிலையில், இன்று (ஜூன் 26)...

காருக்குள் கழுத்தறுத்து வாலிபர் கொலை

கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காருக்குள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் இன்று மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில். இறந்தவர் கேரளாவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. தொடர்ந்து களியக்காவிளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைக்காவு ஊராட்சியில் மணக்குளத்தை சுத்தம் செய்யும் பணி

கிள்ளியூர் தொகுதிக்கட்பட்ட நடைக்காவு ஊராட்சியில் உள்ள மணக்குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. அதே வேளையில் குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. மேலும் குளத்திற்கு செல்லும் பாதையில் புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நன்குருதி சாத்தான்கோடு வைணவ டிரஸ்ட் சார்பில் அதன் தலைவர் ஜெயராஜ் என்பவர் தலைமையில் உறுப்பினர்கள் குளத்திலிருந்து பாசிகளை அகற்றி, பாதையை சீரமைத்தனர்.    இந்த டிரஸ்ட் சார்பில் ஏழைகளுக்கு கல்வி தொகை, திருமண உதவித் தொகை, நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பண உதவி போன்ற...

கொல்லங்கோட்டில்  மதுவிற்ற 2 பேர் கைது 52 பாட்டில் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே புஷ்பகிரி, கரிமரம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து புஷ்பகிரி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சந்திரன் (71) என்பவரை பிடித்து  விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தார் 21 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கரிமரம் பகுதியில் விற்பனைக்கு வைக்க்கப்பட்டிருந்த 31 குவாட்டர் பாட்டில் களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீஸ் சந்திரன் என்பவர்  ரூபி ரோசம்மா...

மக்களவையில் மீண்டும் களமிறங்கிய போர் வீரர்கள்: திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதிவு வைரல்

நாடாளுமன்றத்தில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் இரு நாட்கள் புதிய எம்பிக்கள் பதவியேற்கின்றனர். இந்த சூழலில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா நேற்று சமூக வலைதளத்தில் புகைப்பட பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், கடந்த 2019-ம் ஆண்டில் எம்பிக்களாக பதவி வகித்த கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலேவின் புகைப்படத்தையும், தற்போதைய மக்களவையில் அவர்கள் மீண்டும் ஒன்றுகூடிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். புதிய புகைப்படத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள்...

நீட், நெட் தேர்வு வினாத்தாள் கசிவு: நான்கு கட்டங்களாக விசாரிக்கும் சிபிஐ; பிஹார், குஜராத்துக்கு குழுக்களை அனுப்பியது

நீட் மற்றும் நெட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் குறித்த வழக்குகளை சிபிஐ நான்கு கட்டங்களாக விசாரிக்க உள்ளது. மேலும் ஆதாரங்களை திரட்டுவதற்கு பிஹாருக்கும் குஜராத்தின் கோத்ராவுக்கும் குழுக்களை அனுப்பியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வழக்கத்துக்கு மாறாக 67 மாணவர்கள் முதலிடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பிஹாரில் நீட் தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாளை கசியத் செய்ததாக மாணவர்கள் உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில நாட்களில் யுஜிசி- நெட் தேர்வில் வினாத்தாள் கசிவுக்கான முகாந்திரம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி...

நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய...

பத்மநாபபுரம்: அமைச்சர் தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து...