நடைக்காவு ஊராட்சியில் மணக்குளத்தை சுத்தம் செய்யும் பணி

0
68

கிள்ளியூர் தொகுதிக்கட்பட்ட நடைக்காவு ஊராட்சியில் உள்ள மணக்குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. அதே வேளையில் குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. மேலும் குளத்திற்கு செல்லும் பாதையில் புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எனவே பொதுமக்கள் நன்குருதி சாத்தான்கோடு வைணவ டிரஸ்ட் சார்பில் அதன் தலைவர் ஜெயராஜ் என்பவர் தலைமையில் உறுப்பினர்கள் குளத்திலிருந்து பாசிகளை அகற்றி, பாதையை சீரமைத்தனர்.   

இந்த டிரஸ்ட் சார்பில் ஏழைகளுக்கு கல்வி தொகை, திருமண உதவித் தொகை, நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பண உதவி போன்ற உதவிகள் செய்து வருகின்றனர்.   மேலும் மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஒழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.