கொல்லங்கோட்டில்  மதுவிற்ற 2 பேர் கைது 52 பாட்டில் பறிமுதல்

0
76

கொல்லங்கோடு அருகே புஷ்பகிரி, கரிமரம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து புஷ்பகிரி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சந்திரன் (71) என்பவரை பிடித்து  விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தார் 21 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் கரிமரம் பகுதியில் விற்பனைக்கு வைக்க்கப்பட்டிருந்த 31 குவாட்டர் பாட்டில் களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீஸ் சந்திரன் என்பவர்  ரூபி ரோசம்மா என்ற பெண்ணை  கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.