Home 2024
Yearly Archives: 2024
நிதி ஒதுக்கீட்டில் அனைத்து மாநிலத்துக்கும் ஒரே முறையை பின்பற்ற கூடாது: மத்திய அரசுக்கு தங்கம் தென்னரசு கோரிக்கை
மாநில திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே வரைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு பின்பற்றக்கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசியதாவது:
பிரதமர் சூரிய ஒளி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 11,722 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3,472 சூரிய மின் நிலையங்கள் நிறுவப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் முடிவுறும் பட்சத்தில் இணைப்புகள் கொடுக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஒப்புதலுக்காக கடந்த 3 ஆண்டுகளாக...
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: சட்டப்பேரவையில் பாஜக, பாமக வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தின் மீது பேரவையில் உறுப்பினர்கள் பங்கேற்று விவாதித்தனர்.
நயினார் நாகேந்திரன் (பாஜக): சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு எந்த தடையும் இல்லை. கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமே சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகளே மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். எனவே, மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் சமூக நீதி நிலைநாட்டப்படும். ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு நிலையில்...
கள்ளக்குறிச்சி விவகாரம் | இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் @ சென்னை
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர்....
யூரோ கோப்பை கால்பந்து தொடர்: நாக் அவுட் சுற்றில் இத்தாலி
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான இத்தாலி அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இத்தாலி - குரோஷியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 54-வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் லூகா மோட்ரிச் அடித்த ஷாட்டை இத்தாலி கோல் கீப்பர் கியான்லூகி அற்புதமாக தடுத்தார். எனினும் அடுத்த நிமிடத்திலேயே லூகா மோட்ரிச் கோல்...
வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறியது எப்படி? | T20 WC அலசல்
ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று கிங்ஸ்டனில் ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்களே எடுக்க முடிந்தது.
அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 55 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்தார். இப்ராகிம் ஸத்ரன்18, ரஷித் கான் 19, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 10...
‘இனி எல்லாம் உங்களுடையது சாம்பியன்’ – ஜேக் ஃப்ரேசர் உடனான படத்தை பகிர்ந்த வார்னர்
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ‘சூப்பர் 8’ சுற்றோடு வெளியேறி உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இந்த தொடர் தான் தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர் என தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அறிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இளம் வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் உடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை வார்னர் பகிர்ந்துள்ளார். ‘இனி எல்லாம் உங்களுடையது சாம்பியன்’ என அதற்கு கேப்ஷனும்...
கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைகிறாரா ஜெகன்? – பெங்களூருவில் டி.கே.சிவக்குமாரிடம் பேச்சுவார்த்தை
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடலாமா என்று தீவிரமாக ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அண்மையில் நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில்175 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி,11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில்இக்கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமேவெற்றி பெற்றது. இது ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவரது கட்சியினருக்கும் மிகப்பெரிய...
2025 மகா கும்பமேளாவில் பக்தர் கூட்டத்தை கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: உ.பி. முதல்வர் உத்தரவு
பிரயாக்ராஜில் 2025-ம் ஆண்டில் மகா கும்பமேளா நடைபெற உள்ளதையொட்டி பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று போலீஸாருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
2025-ம் ஆண்டில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக தலைநகர் லக்னோவில் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். அப்போது மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, கூட்டத்தினரை கட்டுப்படுத்துதல், பக்தர்களுக்குத் தேவையான வசதிகள்,...
50 ஆண்டுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் இளம் பிரச்சாரகராக அவசரநிலையை எதிர்த்த நரேந்திர மோடி
கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம்தேதி இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவசரநிலைபிறப்பிக்கப்பட்டு நேற்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது.
அவசரநிலையின் கதை ஜூன் 25, 1975 அன்று தொடங்கவில்லை. அதற்கு முன்னதாகவே, 1974-ம் ஆண்டு குஜராத்தில் ‘நவநிர்மான் அந்தோலன்’ என்ற பெயரில் காங்கிரஸ் அரசின் ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாணவர்கள் தலைமையில் மாபெரும் போராட்டம் நடந்தது....
நாடாளுமன்ற வரலாற்றில் 2-வது முறையாக மக்களவை தலைவர் தேர்தல்
மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தராததால் மக்களவை தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி உள்ளது.
முதன்முறையாக மக்களவை தலைவர் பதவிக்கான தேர்தல் 1952-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றதாக வரலாற்று பதிவுகள் உள்ளன. இதில் தேர்வான கணேஷ் வாசுதேவ் மாவ்லேங்கர், நாட்டின் முதல் மக்களவை தலைவராகக் கருதப்படுகிறார்.
இந்நிலையில் நாடாளுமன்ற வரலாற்றில், மக்களவை தலைவருக்கான தேர்தல் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இன்று (ஜூன் 26) வாக்குப் பதிவுமுறையில் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், மீண்டும் அப்பதவிக்காக ஆளும் கட்சிவிரும்பும் ஓம் பிரகாஷ் பிர்லாபோட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள்...














