Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ஆப்கனை எளிதில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா | T20 WC

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளின் டிரினிடாட்டில் இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. அஸ்மதுல்லா 10 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை...

அரை இறுதி ஆட்டத்தில் இன்று பலப்பரீட்சை: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? | T20 WC

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள கயானாவில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் மோதுகிறது. இரு அணிகளும் கடைசியாக டி 20 உலகக் கோப்பையில் கடந்த 2022-ம் ஆண்டு தொடரின் அரை இறுதி போட்டியில் மோதி இருந்தன. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் 169 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 24 பந்துகளை மீதம் வைத்து 10...

ரொனால்டோவுக்கு அதிர்ச்சி அளித்த கவாரட்ஸ்ஹேலியா: வரலாறு படைத்த ஜார்ஜியா | Euro Cup

ஜெர்மனியின் கெல்சென்கிர்ச்சனில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ‘குரூப் - எஃப்’ போட்டி ஒன்றில் போர்ச்சுகல் அணியை ஜார்ஜியா 2-0 என்று வீழ்த்தி, தொடரின் மிகப்பெரிய அதிர்ச்சி வெற்றியைப் பெற்று ‘ரவுண்ட் ஆஃப் 16’ சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில் ஜார்ஜியா அணிக்காக முதல் கோலை 2-வது நிமிடத்திலேயே அடித்த கவாரட்ஸ்ஹேலியா, போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கால்பந்தாட்டத்தை வழிபாடு செய்து வளர்ந்த ஒரு கால்பந்து வீரர் என்பதே. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜெர்சி எண் 7. ரொனால்டோவை லட்சிய ஆளுமையாகக்...

எதிர்க்கட்சிகளின் ‘நீட்’, ‘மணிப்பூர்’ முழக்கங்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை

“ஜிஎஸ்டியால் தொழில்துறை பலனடைந்துள்ளது. தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் பாதுகாப்புத் துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதியில் அதிகரித்து வருகின்றன.” என்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். 18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இன்று இரு அவைகளின் கூட்டு...

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை: ஆம் ஆத்மி எம்.பி.க்கள் புறக்கணிப்பு

0
தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டாக பங்கேற்கும் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றி வருகிறார். இதனை ஆம் ஆத்மி கட்சியினர் புறக்கணித்துள்ளனர். குடியரசுத் தலைவரின் உரையை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும். இதில் அவை உறுப்பினர்கள் பேசுவார்கள். இந்தச் சூழலில், “நீதி என்ற பெயரில் நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அவசியம்” என ஆம் ஆத்மியின்...

“மக்களவையில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும்” – சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கை நிராகரிப்பு?

மக்களவையில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், “மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். எனவே செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து...

பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஜூன் 26) பின்னிரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படதாகத் தெரிகிறது. முன்னாள் துணை பிரதமரான அத்வானிக்கு 96 வயதாகிறது. அவருக்கு சிறுநீரகம் தொடர்பான உபாதை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகவியல் துறை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய நிலைமை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1980-ல் பாஜக தொடங்கியதில் இருந்து அக்கட்சியின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் எல்.கே.அத்வானி....

மத்திய அமைச்சருக்கு இணையான எதிர்க்கட்சி தலைவர் பதவி: ராகுலுக்கு 8,250 சதுர அடி பங்களா, ரூ.3.3 லட்சம் ஊதியம்

மக்களவைத் தேர்தலில் 99 தொகுதிகள் பெற்ற காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு இந்தஅந்தஸ்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி நியமித்தது. கடந்த 2004 முதல் 20 வருடஅரசியல் வாழ்வில் ராகுலுக்குமுதன்முறையாக அரசியல் சாசனப்பதவி கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க உள்ளன. எதிர்க்கட்சி தலைவருக்கு டெல்லியில் டைப்-8 குடியிருப்பு கிடைக்கும். இதன் பரப்பளவு 8,250சதுர அடி ஆகும். தனி வளாகத்தின் நடுவே வெள்ளை மாளிகை போல் அமைந்துள்ள இந்த பங்களாவில் வரவேற்பறை, படுக்கையறைகள்...

மின் அழுத்த பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.200 கோடி மதிப்பில் 2,500 புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் அறிவிப்பு

மின்னழுத்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண ரூ.200 கோடி மதிப்பில் 2,500 மின்மாற்றிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையில் அறிவித்தார். சட்டப் பேரவையில் எரிசக்தி துறை தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்: தேரோடும் வீதிகளில்... தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கும்பகோணத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில், திருநாகேஸ்வரர் கோயில், கவுதமேஸ்வரர் கோயில், வீர சைவ மடம், அபிமுகேஸ்வரர் கோயில், சாரங்கபாணி கோயில், சோமேஸ்வரர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில், சக்ரபாணி கோயில், ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்...

“விரைவான நீதி கிடைப்பதே சரியான நீதி பரிபாலனம்” – உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகமுத்து கருத்து

வழக்குகளில் துரித விசாரணை மூலம் விரைவான நீதி கிடைப்பதே சரியான நீதி பரிபாலனமாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். நாகமுத்து தெரிவித்தார். இந்திய தண்டனைச் சட்டம் - 1860, தற்போது பாரதிய நியாய சன்ஹிதா - 2023 (பிஎன்எஸ்) என்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் - 1973, தற்போது பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா - 2023 (பிஎன்எஸ்எஸ்) என்றும் இந்திய சாட்சியச் சட்டம் - 1872, தற்போது பாரதிய சாக் ஷய அதிநியம் - 2023 (பிஎஸ்ஏ) எனவும் பெயர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி...

நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய...

பத்மநாபபுரம்: அமைச்சர் தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து...