Home 2024
Yearly Archives: 2024
அவசரநிலை பற்றிய கருத்தை தவிர்த்திருக்கலாம்: மக்களவைத் தலைவரை நேரில் சந்தித்த ராகுல் அதிருப்தி
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நேற்று சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, அவசரநிலை பற்றி அறிக்கை வெளியிட்டதற்காக அதிருப்தி தெரிவித்தார்.
மக்களவைத் தலைவராக 2-வதுமுறையாக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்ட ஓம் பிர்லா, அவசரநிலை பிரகடனத்தின் 50-வது ஆண்டை முன்னிட்டு மக்களவையில் ஒரு அறிக்கையை வெளியிட்டாார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை அமல்படுத்தியது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என பிர்லா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திநேற்று ஓம் பிர்லாவை சந்தித்துப்...
மாநிலங்களவையில் அமைச்சர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது அமைச்சரவை சகாக்களை மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅமைச்சரவை கடந்த 9-ம் தேதிபதவியேற்றது. பிரதமரை தொடர்ந்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
18-வது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் மக்களவை தலைவர் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை சகாக்களை மக்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில்...
கேஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது சட்ட விரோதம் இல்லை: டெல்லி சிறப்பு நீதிமன்றம் கருத்து
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சிபிஐ நேற்றுமுன்தினம் கைது செய்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
அர்விந்த் கேஜ்ரிவாலை திட்டமிட்டே சிபிஐ கைது செய்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், “வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கையில் சிபிஐயின் கைதை சட்டவிரோதம் என்று கூற முடியாது” என்று தெரிவித்த சிறப்பு நீதிமன்றம், கேஜ்ரிவாலை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐவுக்கு அனுமதி வழங்கியது.
கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் எக்ஸ் பக்கத்தில் “அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஜூன்20-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், உடனடியாக...
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடத்த மத்திய பிரதேசத்தைவிட குறைவான நிதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் நேற்று பதில் அளித்து, அத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் முதல்முறையாக கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் கடந்தாண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இவ்வளவு சிறப்பான ஒரு கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்சியை நான் எங்குமே பார்த்ததில்லை என்று பிரதமர் குறிப்பிட்டுப் பாராட்டினார். இந்த கேலோஇந்தியா விளையாட்டு போட்டியை நடத்த மத்தியப் பிரதேச மாநிலத் துக்கு, சென்ற ஆண்டு மத்திய அரசு கொடுத்த நிதி ரூ.25 கோடி.
இந்தமுறை...
வருவாய்த்துறை நில விவரங்கள் டிஜிட்டல்மயம்: தாலுகா அலுவலகங்களுக்கு அலையாமல் ஆவணங்களை வீட்டிலிருந்தே பெறலாம்
தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அனைத்து நில ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ள நிலையில், பட்டா மாற்றம், நில எல்லை அளவை, புல வரைபடம் என அனைத்தையும் ஆன்லைனில் விண்ணப்பித்து, வீட்டிலிருந்தே பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நிலம் வாங்குபவர், விற்பவர் பட்டா மாறுதல், புல எல்லை அளவீடு உள்ளிட்ட அனைத்து வருவாய் ஆவணங்கள் சார்ந்தசேவைகளுக்காக முன்பெல்லாம் வருவாய்த்துறை அலுவலகங்களை நாடித்தான் ஆகவேண்டியிருந்தது. ஆனால், தற்போது அனைத்து ஆவணங்களையும் எவ்வித அலைச்சலுமின்றி ஆன்லைனில் பெற்றுக்கொள்ள முடியும். இவை அனைத்தும், வருவாய் ஆவணங்கள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சாத்தியமாகியுள்ளது.
மேலும்,...
குறு, சிறு நிறுவனங்களுக்கு உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு, உதவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
ஜூன் 27 - குறு, சிறு, நடுத்தரதொழில் நிறுவனங்கள் நாள். திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பட்டியலினத்தவர், பழங்குடியினர் தொழில் தொடங்க புத்தொழில் நிதி, சந்தைப்படுத்த தேவையான வசதிகள், தமிழ்நாடு தென்னை நார் கொள்கை...
விக்கிரவாண்டி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும்: பாமக தரப்பில் மனு
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றுபாமக தரப்பில் தேர்தல் நடத்தும்அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விக்கிரவாண்டிதொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகத்திடம், பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் நிர்வாகிகள் நேற்று கோரிக்கை மனு நேற்று அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் பாலு கூறியதாவது: விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் புகார்களை பெறுவதற்கு உரிய அதிகாரிகள் இல்லை. இந்த தேர்தலில் ஆளும்திமுக, பல்வேறு தில்லுமுல்லுகளை, விதி...
பேரூராட்சி, நகராட்சிகளை தரம் உயர்த்த நாளை சட்ட திருத்தம்
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சிகளை தரம் உயர்த்துவது குறித்தசட்டத் திருத்தம் சட்டப்பேரவையில் நாளை கொண்டுவரப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை கட்சித் தலைவர் டி.ராமச்சந்திரன், ‘தேன்கனிகோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு,‘‘ அதிக மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சட்டத்திருத்தம் ஜூன் 29-ம் தேதி (நாளை) சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. அதன்...
‘இந்தியன்’ தாத்தாவால் 106 வயதில் சண்டை போட முடியுமா? – ஷங்கர் விளக்கம்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த்,எஸ்.ஜே.சூர்யா, ரகுல் பிரீத் சிங் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’ . ஜூலை 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. படத்தில் கமல்ஹாசன், இந்தியன் தாத்தாவாக பல்வேறு கெட்டப்புகளில் வருகிறார். அவர் ஆக்ஷன்காட்சியில் பறந்து பறந்து சண்டையும் போட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ படம் 1996-ல் வெளியானது. அந்தப் படத்தில் இந்தியன் தாத்தாவான சேனாபதிகேரக்டர் 1918-ம் ஆண்டு பிறந்ததாகக் கூறப்பட்டிருக்கும். அதன்படி பார்த்தால், இந்தியன் தாத்தாவின் தற்போதைய வயது 106....
‘குருவி தலையில் பனங்காய்’ பிட்ச் – ஆப்கன் இதயத்தை நொறுக்கிய ஐசிசி | T20 WC 2024
தருவ்பாவில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு கிரீன் டாப் பிட்ச் அனுபவமற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு அப்படிப்பட்ட ஒரு பவுலிங் பிட்சைப்போட்டு ஐசிசி அந்த அணியைக் காலி செய்துள்ளது என்றுதான் கூற வேண்டியுள்ளது. மொத்தப் போட்டியுமே 20 ஒவர்கள்தான் தாங்கியது.
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற டாப் அணிகள் தகுதி பெறாமல் போன நிலையில் ஆப்கானிஸ்தான் அணி நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகளை கடினமாக ஆடி வீழ்த்தி அரையிறுதிக்கு வந்துள்ளனர். பெரும்பாலும் இந்தியப் பிட்ச்களில் அதுவும் இந்தியாவில் அவர்கள் ஆடும்...














