பேரூராட்சி, நகராட்சிகளை தரம் உயர்த்த நாளை சட்ட திருத்தம்

0
62

தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சிகளை தரம் உயர்த்துவது குறித்தசட்டத் திருத்தம் சட்டப்பேரவையில் நாளை கொண்டுவரப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை கட்சித் தலைவர் டி.ராமச்சந்திரன், ‘தேன்கனிகோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு,‘‘ அதிக மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சட்டத்திருத்தம் ஜூன் 29-ம் தேதி (நாளை) சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. அதன் மூலம் வருவாய் மற்றும் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் அவற்றை தரம் உயர்த்த முடியும்’’ என்றார்.