Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மகனைக் கொன்ற தந்தை போலீசில் சரண்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் கூலித் தொழிலாளியான இவருக்கு ஜினு 36, ஜிஜின் 34, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் இவர்களில் மூத்த மகன் ஜினு பட்டப்படிப்பை முடித்து கேரளாவில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார் ஜினு-வுக்கு திருமண வரன்கள் பார்க்க துவங்கி உள்ளனர் ஆனால் வரன்கள் ஏதும் கைகூடாமல் போனதால் விரக்தியடைந்த ஜினு அதனை மறக்க மது பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார் நாளடைவில் மதுவிற்கு அடிமையான ஜினு வேலைக்கு செல்வதை...

குமரி பகவதி அம்மன் கோவிலில் ரத்தினகிரி சாமியார் தரிசனம்.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவில் சாமியார் பாலமுருகன் அடிமை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு நேற்று வருகை தந்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் உற்சாக வரவேற்பு அளித்தது. அதைத்தொடர்ந்து, அவர் பகவதி அம்மன் கோவிலில் வழிபட்டார். பின்னர் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் மேம்பாட்டு பணிகள்.

நாகர்கோவில் மாநகராட்சி 51வது வார்டுக்குட்பட்ட உடையப்பன் குடியிருப்பு பகுதியில் ரூ. 18 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் 9வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் சன்னதி தெருவில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா: அக்சர், குல்தீப் அசத்தல் | T20 WC

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா. அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி இருந்தனர். மேற்கு இந்தியத் தீவுகளின் கயானாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் சால்ட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். அர்ஷ்தீப் வீசிய மூன்றாவது ஓவரில் மூன்று...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா: மகளிர் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் சென்னைசேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 4 நாட்கள் கொண்ட ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் மோத...

டக்வொர்த்-லீவிஸ் உருவான வரலாறு

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தவிர்க்கமுடியாத டக்வொர்த் லீவிஸ் முறையை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான பிராங்க் டக்வொர்த் தனது 84 வயதில் கடந்த 25-ம் தேதி காலமானார். மழை போன்ற வானிலை காரணங்களால் ஒருநாள் கிரிக்கெட், டி 20போட்டி பாதிக்கப்பட்டால் இலக்கை கணக்கீடு செய்து மாற்றி அமைப்பதற்கும், ஆட்டத்தின் முடிவை காண்பதற்கும் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விதியை இங்கிலாந்தை சேர்ந்த புள்ளியியல் நிபுணர்களான பிராங்க் டக்வொர்த், டோனி லீவிஸ் ஆகியோர் இணைந்து கண்டுபிடித்தனர். இவர்கள் உருவாக்கிய டக்வொர்த் லீவிஸ் பார்முலாவை 1999-ம் ஆண்டு...

ஜூலை 5-ல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடக்கம்: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசு

தமிழ்நாடு கிரிக்கெட் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் போட்டிகள் வரும் ஜூலை 5-ம் தேதி தொடங்குகின்றன. இந்தத் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. உள்ளூர் வீரர்களின் திறனை கண்டறியும் இந்த தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. லீக் ஆட்டங்கள் திருநெல்வேலி, நத்தம், சேலம், கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படுகின்றன. லீக் ஆட்டங்கள் ஜூலை...

“இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும்” – கேப்டன் ரோகித் | T20 WC

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்களில் வென்றுள்ளது இந்தியா. இந்நிலையில், இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தது. “இந்த வெற்றி எங்களுக்கு மன நிறைவை தருகிறது. இதற்காக நாங்கள் அணியாக இணைந்து கடும் உழைப்பை செலுத்தினோம். இதில் அனைவரின் பங்கும் உள்ளது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் கள சூழலுக்கு ஏற்ப ஆடி வருகிறோம். நானும், சூர்யகுமார் யாதவும் அமைத்த பார்ட்னர்ஷிப் எங்களுக்கு முக்கியமானதாக அமைந்தது. இந்த டார்கெட்டை எதிரணிக்கு...

அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை – வேலைக்கு ஆகுமா..?

அரசு எந்த முடிவு எடுத்தாலும், 3 அம்சங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். நோக்கம், பயனாளர், செயல்திறன். மத்திய அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு, கட்டாயம் ஆகிறது. காலை 9:15-க்குள் வரத் தவறினால், அரை நாள் தற்செயல் விடுப்பாகக் கொள்ளப்படும் முன்னர் குறிப்பிட்டதில் 2 அம்சங்கள் - நோக்கம், பயனாளர் - தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதனை முறையாக முழுமையாகச் செயல்படுத்த சாத்தியக் கூறுகள்..? பயோமெட்ரிக் வருகைப் பதிவு முழுப் பயன் தர வேண்டும் எனில், உள்வாயில் வெளிவாயில் இரண்டும் பயோமெட்ரிக் கட்டுப்பாட்டுக்குள்...

உலக அரங்கில் கால்பதிக்கும் இந்திய பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: பிரதமர் மோடி பாராட்டு

உலக அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களை லண்டனை சேர்ந்த ‘டைம்ஸ் மேல் படிப்பு தரவரிசை நிறுவனம்’ பட்டியலிடுகிறது. இந்த நிறுவனத்தின் சர்வதேசவிவகாரப் பிரிவு தலைமை அதிகாரி பில் பாட்டி விடுத்துள்ள செய்தியில், “டைம்ஸ் மேல்படிப்பு தரவரிசை பட்டியலில் இடம் பெறும் இந்தியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நரேந்திர மோடி மேற்கொள்ளும் உலகளாவிய சீர்திருத்தமே காரணம். கடந்த 2017-ம் ஆண்டில், டைம்ஸ் மேல்படிப்பு தரவரிசைப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் 42 மட்டுமே இடம் பெற்றன. தற்போது 2025-ம் ஆண்டு தரவரிசை பட்டியலில் இடம் பெற...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி...

நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய...

பத்மநாபபுரம்: அமைச்சர் தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து...