Home 2024
Yearly Archives: 2024
அமித்ஷாவுடன் தமிழிசை சந்திப்பு ஏன்?
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், இந்த முறை கூட்டணியின் பலத்தில் பாஜக ஆட்சியமைத்திருக்கிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கட்சியின்பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனைகளும் உயர்மட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, டெல்லியில் நேற்றுமுன்தினம்...
21-60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை: மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் முதல் அமல்
21 முதல் 60 வயதுகுட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிர சட்டப் பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சர் பொறுப்பை வகிப்பவருமான அஜித் பவார் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல்செய்தார். அப்போது பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் பல்வேறு இலவச திட்டங்களை அவர் அறிவித்தார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து துணை முதல்வர் அஜித் பவார் கூறியதாவது: `முதல்வரின் என் அன்புத் தங்கை' திட்டத்தின் கீழ்...
திருப்பதி தேவஸ்தானத்தில் முறைகேடுகள் நடந்ததா? – விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பதவியேற்ற பிறகு திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.அப்போது, “கடந்த ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள், விஐபி பிரேக்தரிசன டிக்கெட்டுகள், ஒப்பந்தபணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார் வந்தன.
இதன் பேரில் திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள பல்வேறு துறைகளில் விஜிலென்ஸ் அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை...
எனக்கு அறிவுரை கூற வேண்டாம்: காங். எம்.பி தீபேந்தர் ஹூடாவுக்கு சபாநாயகர் கண்டிப்பு
‘ஜெய் சம்பவிதான்’ என கோஷமிட்டது பற்றி சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி தீபேந்தர் ஹூடாவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையில் கண்டனம் தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி.க்களில் சசிதரூர் எம்.பி.யாக பதவியேற்றார். உறுதிமொழியை வாசித்து முடித்ததும் அவர் ஜெய் ஹிந்த், ஜெய்சம்விதான் (அரசியல் சாசனம் வாழ்க) என கோஷமிட்டார்.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிஎம்.பி.க்களில் சிலர் அவையில் ‘ஜெய் சம்விதான்’ என கோஷமிட்டனர். சசிதரூர் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் கை கொடுத்துவிட்டு திரும்பியபோது கோஷமிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை பார்த்து...
பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பரில் கல்லூரிகள் திறப்பு: ஏஐசிடிஇ
பொறியியல் படிப்புகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார், அனைத்துவித உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; ஏஐசிடிஇ சார்பில் ஆண்டுதோறும் கல்வியாண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. இதை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள் வகுப்புகள் தொடங்கும் நாள், பருவத்தேர்வுகள் மற்றும் விடுமுறைகள் உட்பட அனைத்து அலுவல் விவகாரங்களையும் முடிவு செய்து செயல்படுகின்றன.
அதன்படி வரும் கல்வியாண்டுக்கான(2024-25) கால அட்டவணை தற்போது...
நடக்காத விஷயத்துக்காக மீண்டும் தீர்மானம்: நீட் விலக்கு மசோதா குறித்து பாஜக எம்எல்ஏக்கள் விமர்சனம்
சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச பேரவைத் தலைவர் வாய்ப்பு தராததால் பாஜக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் கூறியதாவது:
நீட் தேர்வு வேண்டாம் என்றுமுதல்வர் இன்று மீண்டும் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க ரூ.1 கோடி, முதுகலை படிப்புக்கு ரூ.5 கோடி வரை செலவாகிறது. ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் தீர்மானம்...
முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்த தாயிடம் இருந்து பிரிந்த குட்டி யானை உயிரிழப்பு
கோவை மருதமலை வனப்பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானை உயிரிழந்தது.
கோவை மாவட்டம் மருதமலையில் கடந்த மாதம் 31-ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் ஐந்து நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு தாய் யானை வனப்பகுதிக்குள் கூட்டங்களுக்குள் விடப்பட்டது.
பின்னர் அந்த தாய் யானையுடன் சுற்றி வந்த குட்டி ஆண் யானையும் வனத்துறையினர் பராமரித்து வந்த நிலையில் அந்தக் கூட்டத்துடன் குட்டியைச் சேர்க்க வனத்துறையினர் முயற்சி செய்தனர்....
298 மில்லி மீட்டர் மழைப்பதிவு: கூடலூர், பந்தலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
பந்தலூரில் 298 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இன்று (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. உதகை குன்னூர் கோத்தகிரி குந்தா பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக பந்தலூரில் அதிக கன மழை பெய்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி கடலூரில் 298 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன்...
பெரியார் பல்கலை., பட்டியலின பேராசிரியைக்கு பதவி மறுப்பு: ராமதாஸ் கண்டனம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேராசிரியை ஒருவருக்கு பதவி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கல்வியியல் துறைத் தலைவர் பதவிக்கு உரிய தகுதியும், பணிமூப்பும் கொண்ட தனலட்சுமி என்ற பேராசிரியையை புறக்கணித்து விட்டு, வெங்கடேஸ்வரன் என்ற ஆசிரியரை நியமித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார். பேராசிரியை தனலட்சுமிக்கு அனைத்து தகுதிகளும்...
மணவாளக்குறிச்சியில் கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ரமேஷ் தலைமையில் துணை தாசில்தார் ராஜா, தனி வருவாய் ஆய்வாளர் அனில்குமார் மற்றும் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று சுங்கான்கடை, தோட்டியோடு ஆகிய பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். ஆளூர் வீராணி ரயில்வே பகுதியில் செல்லும்போது அங்கு ரயில் மூலம் கேரளாவுக்கு கொண்டு செல்ல சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 200 கிலோ அரிசி மூடைகள் தண்டவாளம் பகுதியில் பதுக்கி வைக்கப்ட்டிருந்ததை கண்டு பிடித்தனர். உடனே அவற்றுகளை மீட்டு...














