Google search engine
Home 2024

Yearly Archives: 2024

டெல்லியில் தேர்தல் தோல்விக்கு ஆம் ஆத்மி மதுபான ஊழலே காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியின் மதுபான ஊழலால்தான் மக்களவைத் தேர்தலின் போது டெல்லியில் எங்கள் கட்சி தோல்வி அடைந்தது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் தத் நேற்று கூறியதாவது: டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக நாங்கள் புகார் செய்தபோது, இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 18 மாதங்கள் வரை அமலாக்கத் துறையும் சிபிஐ அமைப்பும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மக்களவைத்...

தாமதமானாலும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும்: இஸ்ரோ தலைவர் கருத்து

சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப, கேப்சூல் வகை விண்கலம் தயாரிக்கும் பொறுப்பை போயிங்நிறுவனத்திடம் அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா வழங்கியது. இதன் வடிவமைப்பாளர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். இவர்சர்வதேச விண்வெளி மையத்துக்கு பல முறை சென்று திரும்பிய அனுபவம் மிக்கவர். போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம் பரிசோதனை முயற்சியாக, கடந்த மாதம் 5-ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து அட்லஸ்-5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதில் சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர்...

ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தரைப்படை, கடற்படை தளபதிகளாக நியமனம்

ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தஇருவர் தரைப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவ வரலாற்றில், ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தளபதிகளாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இந்திய தரைப் படைத் தளபதியாகவும், அட்மிரல் தினேஷ் திரிபாதி இந்திய கடற்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உபேந்திர திவேதியும், தினேஷ் திரிபாதியும் 1970-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள ரிவா சைனிக் பள்ளியில் 5-வது வகுப்பு முதல் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்ப முதலே இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். பின்னர் வெவ்வேறு படைகளில்...

அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டம்: டெல்லி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு

புதிய குற்றவியல் சட்டம் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்த நிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை இன்று முதல் நாடு முழுவதும்...

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்

தொழில் முதலீடுகள் தொடர்பான முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னை, திருவல்லிக்கேணியில் பிரதமரின் மனதின் குரல் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அருகிலேயே பெங்களூரு விமான நிலையம் அமைந்திருக்கும் நிலையில் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது சாத்தியமா என்பது குறித்து மேலும் ஆராய வேண்டும். ஏற்கெனவே முதல்வர் ஸ்பெயின் பயணம் மேற்கொண்டார். அதில் ஈர்க்கப்பட்ட...

நகராட்சி நிர்வாக துறை போட்டி தேர்வில் குளறுபடி நடந்ததாக தேர்வர்கள் புகார்

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும்குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப்பொறியாளர் உள்ளிட்ட பணிகளில்2,455 காலி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்டது இந்நிலையில், வினாத்தாள்களின் உறைகள் மற்றும் வினாத்தாள்களில் சீல் பிரிக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் தேர்வர்களுக்கும், மையப் பொறுப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. இதுகுறித்து போட்டித் தேர்வர்கள் சிலர் கூறியதாவது:...

குறு, சிறு தொழில் மானிய கோரிக்கை மீதான அரசின் அறிவிப்புக்கு டான்ஸ்டியா வரவேற்பு

தமிழக சட்டப் பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் சி.கே.மோகன், பொதுச் செயலாளர் எஸ்.வாசுதேவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கையில் 7 சதவீத வட்டி விகிதத்தில் கலைஞர் கடனுதவி திட்டம், படித்த இளைஞர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தில் தளர்வு, தோல் பதப்படுத்தும் தொழில்களுக்கு மானிய...

வாடகை வாகன ஓட்டுநர்கள் பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை

பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் உணவு, மளிகை பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கு பெருநிறுவனங்களின் செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இதேபோல், செயலி மூலமாக முன்பதிவு செய்து வாடகை வாகனங்கள் மூலம் பயணங்களையும் மேற்கொள்கின்றனர். இவ்வாறான செயலிகள் மூலமாக இயங்கும் நிறுவன ஊழியர்களின் தேசிய அளவிலான கூட்டம், சென்னையில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் இந்தியன் பெடரேஷன்ஆப் ஆப்-பேஸ்ட் ட்ரான்ஸ்போர்ட் ஒர்க்கர் அமைப்பின் பொதுச்செயலாளர் உதய், தலைவர் பிரசாந்த், பொருளாளர் தர்மேந்தர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்....

தனியார் பள்ளி கலவர வழக்கு: விசிக பிரமுகரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் 2022 ஜூலை 13-ம் தேதி ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையொட்டி, பள்ளி வளாகத்தில்கலவரம் ஏற்பட்டு, உடமைகள் சூறையாடப்பட்டன. இது தொடர்பான வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமைகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. பள்ளி கலவரம்தொடர்பாக வாட்ஸ்அப் குழுஅமைத்து, கலவரக்காரர்களைஒருங்கிணைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திராவிட மணி மற்றும் மாணவியின் தாயார் ஆகியோரிடம்...

மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்: கேரள சுகாதாரத் துறை உத்தரவு

கேரளாவில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அந்தமாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு, பறவைக் காய்ச்சல் ஆகியவை அதிகமாக பரவி வருகின்றன. இதுதொடர்பாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணாஜார்ஜ் தலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பருவகால காய்ச்சல் பரவலை தடுப்பது, நோயாளிகளுக்கு உயர்தரமான சிகிச்சை அளிப்பது...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி...

நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய...

பத்மநாபபுரம்: அமைச்சர் தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து...