Google search engine
Home 2024

Yearly Archives: 2024

கன்னியாகுமரியில் தூய்மை பணி பேரணி.

தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. முன்னதாக, காந்தி மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி கடற்கரை வரை தூய்மை பணி பேரணி நடைபெற்றது. இதில் புள்ளியியல் அலுவலகத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

கட்டுமான பணியின் போது தவறி விழுந்த கொத்தனார் உயிரிழப்பு

திருவட்டாறு அடுத்த வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் பால்சன் (56)கொத்தனார். இவரது மனைவி சுகந்தி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.   மகள்களுக்கு   திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் பால்சன் நேற்று ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்து வரும் கட்டிட கட்டுமான பணிக்காக சென்றார். அங்கு சாரம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாடியில் அமைக்கப்பட்ட சாரத்தில் நின்று  பால்சன் பணிபுரிந்த போது திடீரென நிலை தடுமாறு கீழே விழுந்தார்.  இதில் பால்சனின் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள்...

விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்புகள் இணை இயக்குனர் தகவல்

வேளாண்மை இணை இயக்குனர் மட்டும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமை திட்ட இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -வேளாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலமாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாவட்டத்திற்குள் கிராம வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்த உள்ளது.        ரசாயன உரங்களின் பயன்பாடு குறைத்தல் பயிற்சி வழங்கிட 40 விவசாயிகள் வீதம்...

தூய சவேரியார் பொறியியல் கல்லூரியில் கல்வி கடன் ஒப்பந்தம்

சுங்கான் கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எளிதாக கல்வி கடன் பெறுவதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தின் முதன்மை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இக்கல்லூரியில் பொறியியல் கல்வி படிக்கும் மாணவ மாணவர்கள் அந்தந்த வங்கி கிளையில் எளிதாக கல்வி கடன் பெற முடியும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கன்னியாகுமரி மாவட்ட மண்டல அலுவலக தலைமை மேலாளர் சண்முகசுந்தரம் பாண்டியன், தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஆர்ப்பணியாளர் காட்வின்...

வில்லுக்குறியில் இயற்கை விவசாய கருத்தரங்கு

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கன்னியாகுமரி மாவட்டம்  வில்லுக்குறி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்  ( விவசாயம்)  ஜென்கின் பிரபாகர் தலைமை வகித்தார். வில்லுக்குறி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி வாழ்த்துரையாற்றினார். வாணி, வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் , சில்வெஸ்டர் சொர்ணலதா உதவி ஆய்வாளர் பட்டு வளர்ச்சி துறை ஆகியோர் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கிக் கூறினர். விதை சான்று துறை உதவி இயக்குனர்  ஷீபா உயிர்மச் சான்று  பெற்றிட பங்கேற்பு...

உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை: ஜெய் ஷா அறிவிப்பு!

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தொடர் முழுவதும் இந்திய அணி, அசாதாரணமான திறமை, அர்ப்பணிப்பு மற்றும் ஸ்போர்ட்மேன்ஷிப் ஆகியவற்றை வெளிப்படுத்தியது. இந்த மிகச்சிறந்த சாதனையை...

மூவர் கூட்டணியால் இந்திய அணிக்கு வசமான டி20 உலகக் கோப்பை

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள மூவர் கூட்டணியின் அற்புதமான செயல்பாட்டால் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை வசமாகியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இந்த முறை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தின. இந்நிலையில் நேற்று முன்தினம் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இதற்கு முன்பு 2007-ல் டி20 உலகக் கோப்பையை வென்றிருந்த இந்திய அணி 17 ஆண்டுகள்...

சென்னை டெஸ்ட்: ஃபாலோ ஆன் பெற்றது தென் ஆப்பிரிக்க அணி

இந்திய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் பெற்றது. சென்னையில் இந்த டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்தது. நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஃபாலோ ஆன் பெற்ற...

ரோஹித் முத்தம் முதல் மெஸ்ஸி ஸ்டைல் வரை: இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பின்…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 9, ரிஷப் பந்த் 0, சூர்யகுமார் யாதவ்...

மேற்கு வங்கத்தில் பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்: பாஜக, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கண்டனம்

மேற்கு வங்கத்தில் பொதுமக்கள் முன்னிலை யில் ஒரு பெண்ணை ஒருவர் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ வேகமாக பகிரப் பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் சமூக வலைதளங் களில் ஒரு வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், பொது இடத்தில் ஒரு பெண்ணை ஒரு ஆண் மூங்கில் கம்பால் சரமாரியாக தாக்குகிறார். இதில் அந்தப் பெண் நிலைகுலைந்துவிட்டார். அந்த இடத்தில் இருக்கும் பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்க்கின்றனர். மேலும் அந்த ஆண், தரையில் விழுந்து கிடக்கும் மற்றொரு...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி...

நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய...

பத்மநாபபுரம்: அமைச்சர் தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து...