Google search engine
Home 2024

Yearly Archives: 2024

மக்களவையில் ராகுல் கடும் வாக்குவாதம்: சர்ச்சையான பேச்சுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா கண்டனம்

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும், பாஜக தலைவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராகுலின் சர்ச்சைபேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். அவையில் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார். மக்களவை நேற்று காலை கூடியதும், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்குமக்களவை தலைவர் ஓம் பிர்லாவாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் தொடங்கி வைத்தார். அப்போது, நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை...

முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைமை செயலாளராக பெண் நியமனம்

மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளராக இருந்த நிதின் கரீர் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, முதல் பெண் தலைமைச்செயலாளராக சுஜாதா சவுனிக் பொறுப்பேற்றுக் கொண்டார். மந்த்ராலயாவில் (தலைமைச் செயலகம்) நடைபெற்ற நிகழ்ச்சியில், நிதின் கரீர் தனது பொறுப்பைசுஜாதாவிடம் ஒப்படைத்தார்.1987-ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான இவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். சுஜாதா சவுனிக் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு மாநில உள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்தார். இவரது கணவர் மனோஜ் சவுனிக்கும் மாநில...

ஆர்எஸ்எஸ் கொள்கையால் நாட்டுக்கு ஆபத்து: கார்கே குற்றச்சாட்டு

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள் கைகளால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கார்கே கூறியதற்கு மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜே.பி. நட்டா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். கார்கேவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை அவைக்குறிப்பில் இருந்துநீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்டஅவைத் தலைவர் ஜெகதீப் தன்கர்,கார்கேவின் சர்ச்சை பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். இதுதொடர்பாக அவைத் தலைவர் கூறும்போது,...

அவதூறு வழக்கில் சமூக சேவகர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை: டெல்லி ஆளுநருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட `நர்மதா பச்சாவ் அந்தோலன்’ அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக சேவகர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது. மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மேதா பட்கர், வி.கே.சக்சேனாவுக்கு எதிராக பேசினார். இதையடுத்து, மேதா பட்கருக்கு எதிராக வி.கே. சக்சேனா அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 2001-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அப்போது காதி மற்றும்கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவராக வி.கே. சக்சேனா இருந்தார்.இவர் தற்போது டெல்லி...

பாட்னா தீ விபத்தில் தாய் இறந்ததாக கூறி ரூ.83 லட்சம் காப்பீடு பெற முயன்றவர் சிக்கினார்

பிஹார் மாநிலம் பாட்னா தீ விபத்தில் தனது தாய் இறந்ததாக கூறி அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் ரூ.83 லட்சம் காப்பீட்டு தொகை பெற முயன்றது அம்பல மாகியுள்ளது. பிஹார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த ஏப்ரல் 25-ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்கு களும் முடிந்தன. இந்நிலையில் இந்த ஓட்டல் தீ விபத்தில் இறந்தவர்களில் தனது தாய் சுமன் லாலும் ஒருவர் என அமெரிக்காவில்...

பள்ளி, கல்லூரியில் நுழைவு தேர்வு நடத்த கூடாது: முதல்வரிடம் நீதிபதி முருகேசன் குழு அளித்த அறிக்கையில் பரிந்துரை

மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன் குழு தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தது. உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ் 1 மதிப்பெண்களையும் கணக்கில் கொள்வது, ஆசிரியர் நியமன விதிகளை கடுமையாக்குவது உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய, டெல்லி உயர் நீதிமன்ற...

99% காவல் நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் 99 சதவீத காவல் நிலையங்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்தில் உள்ளன என்றும், அவற்றின் பதிவுகள் பத்திரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் அத்துமீறல்களை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பதிவுகளை பத்திரப்படுத்த தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும். இது தொடர்பான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் நிஜாமுதீன்...

தமிழகத்தில் நிலங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு அமல்: 10% வரை அதிகரிப்பு

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி தவிர மற்ற பகுதிகளில் நிலங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. சந்தை மதிப்புக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக்கட்டணத்தை குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்ற தமிழக அரசு, வழிகாட்டி மதிப்பில் திருத்தங்களை பரிந்துரைக்க ஒரு குழுவை அமைத்தது. இக்குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் செய்ய கால அவகாசம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு, கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி...

தமிழக அரசின் விண்வெளி வரைவு கொள்கை வெளியீடு: மதுரை, தூத்துக்குடி, நெல்லை வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், தமிழக அரசின் விண்வெளி வரைவுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் மதுரை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, விண்வெளிக் கொள்கை வெளியிடப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 27-ம் தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து, தற்போது தொழில்துறை சார்பில், பொதுமக்கள், துறைசார்ந்த நிபுணர்கள் கருத்துகளை கோரும் விதமாக, தமிழ்நாடு விண்வெளி தொழில் வரைவுக் கொள்கை வெளியிடபட்டுள்ளது. இந்த தொழில் கொள்கையைப் பொறுத்தவரை, புத்தாக்கம், முதலீடு ஈர்ப்பு, மாநிலத்தை சர்வதேசஅளவிலும், தேசிய அளவிலும்பொருளாதாரத்தில் சிறந்த மாநிலமாக்கும் கூறுகளை உள்ளடக்கி...

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள்: நாடு முழுவதும் 14,627 பட்டதாரிகள் தேர்ச்சி; தமிழகத்தில் 650 பேர் தேர்வு

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் நாடு முழுவதும் 14,627 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நம்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன்படி நடப்பாண்டு 1,056 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி யுபிஎஸ்சி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி...

நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய...

பத்மநாபபுரம்: அமைச்சர் தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து...