Google search engine
Home 2024

Yearly Archives: 2024

ஆயுர்வேதத்துக்கு எதிரான நிறுவனங்கள் பதஞ்சலியின் நற்பெயரைக் கெடுக்க முயற்சி: பாபா ராம்தேவ் குற்றச்சாட்டு

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் நேற்று கூறியதாவது: ஆயுர்வேத அடிப்படையில் நுகர்வோர் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக பெரு நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், அறிவுஜீவிகள் மற்றும்அரசியல்வாதிகள் ஆகியோர் கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர். பதஞ்சலி தேசியவாதம், சுய பெருமையை பேசுகிறது. ஆனால், அந்த கூட்டணி அதை அழிக்க விரும்புகிறது. அதனால்தான், பதஞ்சலி பிராண்ட் குறித்த தவறான தகவல்களை மக்களிடையே அவர்கள் பரப்புகின்றனர். குறிப்பாக, ஆயுர்வேதம் மற்றும்இயற்கைப் பொருட்கள் பிரிவில் பதஞ்சலியின் நற்பெயரை மக்களிடையே சேதப்படுத்த முயற்சிக்கின்றனர். இத்தனை தடைகளுக்கு மத்தியிலும், முதலீட்டாளர்களின்...

4 மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.327 கோடி போதைப் பொருள் பறிமுதல்

மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தெலங்கானா மற்றும் குஜராத் மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற சோதனையில் ரூ.327கோடி மதிப்பிலான எம்டி போதைப்பொருள் மற்றும் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மகாராஷ்டிராவின் மிரா பயாந்தர் - வசாய் விரார் காவல்துறை ஆணையர் மதுக்கர் பாண்டே அளித்த பேட்டியில் கூறியதாவது: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் செனா கான் என்றஇடத்தில் குற்றப் பிரிவு போலீஸார் கடந்த மே 15-ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது 1 கிலோ மெபட்ரான் (எம்டி) என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்...

ஜெகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தினமும் விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது. இவ்வழக்கில் இவர் கடந்த 2012-ல் கைது செய்யப்பட்டு, 16 மாதங்கள் சிறையில் இருந்தார். பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர் 2014 தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். 2019-ல் நடைபெற்ற தேர்தலில் இவரது கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ஜெகன் ஆந்திர முதல்வராக பதவியேற்றார். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெகன் விலக்கு பெற்றார். கடந்த 5 ஆண்டுகளாக இவ்வழக்கில் ஜெகன் ஆஜராகாமலே இருந்தார். இந்நிலையில்...

“உ.பி. கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம்” – தலைமறைவான போலே பாபா அறிக்கை

121 உயிர்கள் பலியான ஹாத்ரஸ் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம் என போலே பாபா தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கு பின் தலைமறைவானவர் முதல்முறையாக அதன் மீது கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சாகர் விஷ்வ ஹரி போலே பாபா எனப்படும் சூரஜ் பால் ஜாட்டவ் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றவர்கள் விரைந்து நலம் பெற கடவுளை வேண்டுகிறேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் அங்கிருந்து உடனடியாக வெளியேறி விட்டேன். இதனால், அங்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. சில...

நீட் தேர்வு முறைகேடு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மேலும் ஒருவர் கைது

நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த முறைகேட்டில் முக்கிய பங்கு வகித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரின் பெயர் அமன் சிங் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் கைது செய்துள்ளனர். முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹஸாரிபாக் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றின் முதல்வர் இஷான் உல்...

மாநில முன்னேற்றம், இளைஞர் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்த முதல்வர் ஸ்டாலின்: தமிழக அரசு பெருமிதம்

சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் மூலம் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புக்கும் முதல்வர் ஸ்டாலின் வழிவகை செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவை விதிகளில் தனிச்சிறப்பு வாய்ந்த 110-வது விதியின்கீழ், பொது முக்கியத்துவம் வாய்ந்தபொருள் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிடலாம். இந்த அறிவிப்பின்கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது. அந்த வகையில், கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 9 நாட்கள்காலை, மாலை இரு வேளையும் பேரவை கூடி, மானிய கோரிக்கைகள் மீது...

ராமேசுவரம் கஃபே குண்டுவெடிப்பு சர்ச்சை பேச்சு வழக்கை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் ஷோபா நீதிமன்றத்தில் மனு

பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புப்படுத்தி பேசியது தொடர்பாக மதுரை சைபர்க்ரைம் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் பாஜகசார்பில் போட்டியிட்டார். அவர் பேசும்போது, பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘தமிழகத்தில் பயிற்சி பெற்று வருவோர், இங்கு வெடிகுண்டுகள் வைக்கின்றனர்’ என்று தெரிவித்தார். இதற்கு...

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி: உதயநிதி ஆலோசனை

தமிழக அரசுப்பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நேற்று அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதியுடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, சர்வதேச மற்றும்தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற 100 வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின்கீழ்...

ஆண்டுக்கு ரூ.30 கோடி: விளம்பர பலகைகளுக்கு உரிமம் வழங்க சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை மாநகரப் பகுதியில் விளம்பரப் பலகைகளை நிறுவ மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் விளம்பரப் பலகைகளை நிறுவுவது விதிமீறலாகும். எனவே, சென்னை மாநகராட்சி நிர்வாகம் மாநகரப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தது. இதுவரை 460-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. அதில் 30 அடி உயரத்துக்கு மேல் வைக்கப்பட்டிருந்த 250 விளம்பரப் பலகைகள் அஸ்திவாரத்தோடு அகற்றப்பட்டுள்ளன. இதனிடையே, மாநகராட்சியின் விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி வழங்கும் குழு சில தினங்களுக்கு முன்பு கூடியுள்ளது. இதில், விளம்பரப்...

அரசியல் லாபத்துக்காக ‘நீட்’ தேர்வை எதிர்க்கும் கட்சிகள் கூட்டத்தில் விஜய்: தமிழக பாஜக விமர்சனம்

இந்த கூட்டத்தொடரில் முதல்வர்ஸ்டாலின், சில முக்கிய அறிவிப்புகளை 110 விதியின்கீழ் வெளியிட்டார். அந்த வகையில், ‘முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9,324.49 கோடியில் 16,596 கி.மீ. நீளமுள்ள சாலைகள், 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்கதிட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 2 ஆண்டுகளில் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்படும்’ என்று ஜூன் 24-ம் தேதி அறிவித்தார். ‘வரும் 2026 ஜனவரிக்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, டிஎன்பிஎஸ்சி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி...

நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய...

பத்மநாபபுரம்: அமைச்சர் தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து...