ஆர்எஸ்எஸ் கொள்கையால் நாட்டுக்கு ஆபத்து: கார்கே குற்றச்சாட்டு

0
48

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள் கைகளால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கார்கே கூறியதற்கு மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜே.பி. நட்டா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். கார்கேவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை அவைக்குறிப்பில் இருந்துநீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்டஅவைத் தலைவர் ஜெகதீப் தன்கர்,கார்கேவின் சர்ச்சை பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.

இதுதொடர்பாக அவைத் தலைவர் கூறும்போது, “ஆர்எஸ்எஸ் நாட்டின் நலனுக்காக பாடுபடுகிறது’’ என்றார்.