நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உழவாரப்பணி

0
162

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைக்கு பக்தர்கள் மஞ்சள் பொடி மற்றும் பால் ஊற்றி வழிபாடு செய்வது வழக்கம்.இந்தநிலையில் நாகராஜா கோவிலில் வடசேரி திலகவதியார் உழவாரப்பணி குழு மற்றும் தூத்துக்குடி திருதாண்டக வேந்தர் குழுவினர் இணைந்து கோவிலின் உள் சுற்று பிரகாரத்தில் உள்ள செடி, கொடி மற்றும் மணல் திட்டுகளை சரிசெய்து உழவாரப்பணி மேற்கொண்டனர். இந்த பணியினை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மராமத்து பொறியாளர் ராஜ்குமார், கோவில் கணக்கர் சிதம்பரம் ஆகியோர் உடன் இருந்தனர்.