Home 2024
Yearly Archives: 2024
மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப் பதவியேற்பு
மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்த விழாவை இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.
8 முறை எம்.பி.யாக இருந்த கேரளாவின் கொடிகுன்னில் சுரேஷை இடைக்கால சபாநாயகராக நியமிக்காமல், 7 முறை எம்பியாக இருந்த பர்த்ருஹரி மஹதாப்பை இடைக்கால சபாநாயகராக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இவ்விழாவை புறக்கணித்தனர்.
நாடாளுமன்றத்தின் 18-வதுமக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 9-ம்...
சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று 100 இடங்களில் 24 மணிநேர உண்ணாவிரதம்
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி தமி ழகம் முழுவதும் 100 இடங்களில் சிஐடியு சங்கத்தினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழக மக்களுக்கு போக்கு வரத்து சேவையை அளிக்கும் போக்குவரத்துக் கழகங்கள் மிகச்சிறந்த பொதுத்துறை நிறுவனமாகும். இக்கழகங்கள் சேவைத்துறையாக செயல்படுவதால் கடும் இழப்பை சந்திக்கின்றன. எனவே, போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகை சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை...
தமிழகத்தில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
தமிழகத்தில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க 18 மாவட்டங்களில் ரூ.30 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றுஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதானவிவாத்ததுக்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிப்பதற்கான சிறப்புத்திட்டம் சேலம், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்.
உயர் தொழில்நுட்ப சாகுபடியை விவசாயிகளிடம் ஊக்குவித்து உற்பத்தியை பெருக்க ரூ.10.19 கோடி மானியத்தில் பசுமைக் குடில், நிழல் வலைக்குடில்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் துவரை உள்ளிட்ட பிற பயறுவகைகளின் பரப்பு...
முதுநிலை நீட் தேர்வு தள்ளிவைப்புக்கு கண்டனம்: நிரந்தரமாக ரத்து செய்ய முதல்வர், தலைவர்கள் வலியுறுத்தல்
முதுநிலை நீட் தேர்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
யுஜிசி நெட் தேர்வு ரத்தானதை தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டிருப்பது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளது. இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வுகளாக இல்லாமல், கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணி களாக அமைந்துள்ளன.
முறைகேடுகள் வெளிவந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத்தன்மை கொண்ட...
கோவை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
கோவை விமான நிலையத்துக்கு இன்று (திங்கள்கிழமை) காலை மீண்டும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை அவிநாசி சாலையில் 'சிட்ரா' பகுதி அருகே அமைந்துள்ளது கோவை சர்வதேச விமான நிலையம். இங்கு உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் இன்று இ-மெயில் மூலம் மிரட்டல் பெறப்பட்டது. இந்த மிரட்டல் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின்...
ஓயாத மின் வெட்டு: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் நள்ளிரவில் மக்கள் மறியல்
கூடுவாஞ்சேரி, நந்திவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாகத் தினமும் பல மணி நேரம் பகல் இரவு பாராமல் மின்வெட்டு ஏற்படுவதால் மின் வாரியத்தின் மீது விரக்தியடைந்த பொதுமக்கள் சுமார் 200 பேர் நள்ளிரவு கூடுவாஞ்சேரியில் ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, நந்திவரம், கன்னிவாக்கம், சாந்தாதேவி நகர், தர்காஸ், பெருமாட்டுநல்லூர் உட்பட்ட பல்வேறு நகர்ப் பகுதிகளில் நேற்று இரவு 10:30 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. வெகு நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில்...
நீட் தேர்வு எதிரான போராட்டம்- விஜய் வசந்த் பங்கேற்பு
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கும் நீட் முறைகேடுக்கு எதிராக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கன்னியாகுமரி உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
இந்த போராட்டத்தில் கட்சி மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்துஜா குடும்பத்தினருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை: சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு
வீட்டுப் பணியாளர்களை துன்புறுத்திய வழக்கில் இந்துஜா குடும்பத்தினருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க் என இந்தியாவில் இந்துஜா குழுமம் ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.
இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால், அவரது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா சுவிட்சர்லாந்தில் வசிக்கின்றனர்.
இவர்கள் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய...
கர்நாடகாவில் நடிகர் தர்ஷனின் மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை: வழக்கை மீண்டும் விசாரிக்க போலீஸார் நடவடிக்கை
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் (47) தனது தோழி பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமியை (33) அடித்துக் கொன்றதாக கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில்பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்ஸர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்படை போலீஸார் 17 பேரையும் காவலில் எடுத்து ஒருவாரத்துக்கு மேலாக தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், தர்ஷன் தனது தோழி பவித்ரா கவுடாவின் கண் எதிரில் ரசிகரை அடித்து உதைத்து சித்ரவதை செய்தது உறுதியாகியுள்ளது. மேலும்...
3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
தற்போது நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டங்கள்,காலனிய காலத்தில் கொண்டு வரப்பட்டவை என்று கூறி, மத்திய அரசு கடந்த ஆண்டு 3 புதிய குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இதன்படி, இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய 3 சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023 மற்றும் பாரதிய சாக்ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்தச் சட்டங்கள் வரும் ஜூலை 1-ம்...














