குடும்ப தகராறில் குழந்தையுடன் பெண் மாயம்.

0
133

நாகர்கோவில் வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் துரை. இவருடைய மனைவி பாப்பா (வயது 30). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடந்தது. தற்போது 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவத்தன்று பாப்பா குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்ப வரவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய் மற்றும் குழந்தையை தேடி வருகிறார்கள்.