திக்குறிச்சி பகுதியை சேர்ந்த மோகன் மகள் அர்ச்சனா (23), மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைசி தேர்வு எழுத செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் அர்ச்சனா தனது வீட்டிற்கு போன் செய்து, தான் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை தேட வேண்டாம் என்றும் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இது குறித்து அர்ச்சனாவின் தந்தை மோகன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















