Google search engine
டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவைப் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். மோசமான ஃபார்ம் காரணமாக நேற்று தொடங்கிய இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஷுப்மன் கில் களமிறங்கினார். இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது: உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு...
இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 181 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்தப் போட்டியில் 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா விளையாடுகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை...
ஜன. 11, 12-ம் தேதிகளில் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் செஸ் போட்டியை நடத்தவுள்ளது. சென்னை, மயிலாப்பூர் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த செஸ் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியானது மயிலாப்பூர் லேடி சிவசாமி ஐயர் மகளிர் மேனிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெறும். போட்டி காலை 8.00 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். ஆன்லைனில் பதிவு: 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் பிரிவுகள் போட்டிகள்...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபப்யணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் 4 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. பெர்த்தில் நடைபெற்ற முதல்...
இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் நெல்சன் நகரிலுள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. குசல் பெரேரா அபாரமாக விளையாடி 46 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்களும்,...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார். கால் இறுதி சுற்றில் வைஷாலி 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் சூ ஜினரை தோற்கடித்தார். இதையடுத்து நடைபெற்ற அரை இறுதி சுற்றில் மற்றொரு சீன வீராங்கனையான ஜு வென்ஜுனுடன் மோதினார் வைஷாலி. இதில் வைஷாலி 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அரை இறுதி...
டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 907 புள்ளிகளை குவித்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களில் இதற்கு முன்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் 904 புள்ளிகளை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது பும்ரா முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 904 புள்ளிகள் சேர்த்து அஸ்வினின்...
இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிக்கு உலகளாவிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த போட்டிகளை காண வரும் ஆதரவாளர்கள் தங்களது அணிகளையும், நட்சத்திர வீரர்களையும் ஆதரிக்கும் விதமாக மைதான கேலரிகளில் பாடல்கள் மற்றும் கோஷங்களுடன் கலகலப்பான சூழ்நிலையை உருவாக்குவார்கள். போட்டி இல்லாத நாட்களில் கூட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரீமியர் லீக் குறித்தும், கிளப்கள் இடையிலான வீரர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்வது வாடிக்கையாக...
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபப்யணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (3-ம் தேதி) தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து...
சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழக அணி, கேரளாவை எதிர்த்து விளையாடியது. இதில் தமிழக அணி 29-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அதிகபட்சமாக முகமது வஹித் 18 கோல்கள் செலுத்தினார். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தெலங்கானா...