இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 420 ரன்களும், இந்தியா ‘ஏ’ அணி 194 ரன்களும் எடுத்தன. 226 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது.
நேற்று...
இந்திய மைதானங்களில் பார்வையாளர் மாடத்தில் இருந்து வரும் மக்களின் ஆரவாரம் சிறப்பானது என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
வரும் 30-ம் தேதி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் இந்த தொடரின் முதல் சுற்று நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்தியா மற்றும்...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரரான சாஹிப்ஸதா ஃபர்ஹான் 45 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இறுதிக்கட்டத்தில் பஹீம் அஷ்ஃரப் 8 பந்தில்...
நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை வென்றுள்ளார் பிரான்ஸ் நாட்டு கால்பந்து அணியின் முன்கள வீரர் டெம்பெல்லே. அவர் கிளப் அளவில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். 2024-25 சீசனில் பிஎஸ்ஜி அணிக்காக சிறந்த பங்களிப்பை அவர் வழங்கினார். அது அந்த அணியின் வெற்றிக்கு உதவியது.
சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் Ballon d'Or விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு...
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு அணி கேப்டன்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியின்போது பாகிஸ்தான் கேப்டன் சல்மானுடன் கைகுலுக்க இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் மறுத்துவிட்டார்.
கடந்த ஏப்ரலில் பஹல்காமில் நடந்த கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவின் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற...
சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடிக்கு 2-வது இடம் கிடைத்தது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாட்விக், சிராக் ஜோடி, தென் கொரிய ஜோடியும், உலக சாம்பியனுமான கிம் வான் ஹோ, சியோ செங் ஜே ஜோடியுடன் மோதியது.
இதில் தென் கொரிய ஜோடி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடியை...
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டதால் தோல்வி கண்டோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டி20 வடிவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற சூப்பர்-4 சுற்று முதல் ஆட்டத்தில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதின.
முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள்...
கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
சியோல் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இகா ஸ்வியாடெக்கும், ரஷ்யாவின் இகாடெரினா அலெக்சாண்ட்ரோவாவும் மோதினர். இதில் ஸ்வியாடெக் 1-6, 7-6 (7/3), 7-5 என்ற செட் கணக்கில் இகாடெரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. எப்போதுமே இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது அதன் எதிர்பார்ப்பு என்பது பலமடங்கு அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டமும், அதில் நிகழ்ந்த சில நிகழ்வுகளும் எதிர்பாராத விதத்தில் புதிதாக இருந்தன.
பஹல்காம் தாக்குதலின் தாக்கம்...
ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இதன் 11-வது மற்றும் கடைசி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி, முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் சோங்கி டானுடன் மோதினார்.
இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த வைஷாலி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாட தகுதி பெற்றார்.
இந்தியாவில் இருந்து திவ்யா தேஷ்முக்,...




