உலக குத்​துச்​சண்டை போட்​டி​யின் மகளிர் 57 கிலோ பிரி​வில்​(ஃபெதர்​வெ​யிட்) இந்​திய வீராங்​கனை ஜாஸ்​மின் லம்​போரி​யா, 48 கிலோ பிரி​வில் மினாக் ஷி ஆகியோர் தங்​கம் வென்​றனர். இங்​கிலாந்​தின் லிவர்​பூல் நகரில் உலக குத்​துச்​சண்டை போட்டி நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற 57 கிலோபிரிவு போட்​டி​யில் இந்​தி​யா​வின் ஜாஸ்​மினும், போலந்​தின் ஜூலியா ஸ்செரெமெட்​டா​வும் மோதினர். இதில் ஜாஸ்​மின் லம்​போரியா 4-1 (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) என்ற கணக்​கில் போலந்து...
 சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வரு​கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சுற்றில் சீன அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. தேசிய மகளிர் கால்பந்து: தமிழக அணி வெற்ற: 30-வது...
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார். குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் உலக மல்யுத்தப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 57 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியில் அமன் ஷெராவத் பங்கேற்கவிருந்தார். போட்டிக்கு முன்னதாக அவரது எடை சரிபார்க்கப்பட்டபோது அவர் 1.7 கிலோகிராம் எடை கூடுதலாக இருந்தார். இதையடுத்து போட்டியிலிருந்து அவர் தகுதி...
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் லக்சயா சென்னும், சீன வீரர் லீ ஷெபெங்கும் மோதினர்.இதில் லீ ஷெபெங் 21-15, 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். 2-வது இடம் பிடித்த லக்சனா சென்னுக்கு வெள்ளி கிடைத்தது. சாட்விக், சிராக் ஜோடிக்கு 2-வது இடம்: இதேபோட்டியின்...
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் உணர்வுடன் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம், அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இன்னும் நிறைய என்னென்னவோ செய்திகள் அடிபட்ட வண்ணம் இருக்கின்றன. இந்திய அணியின் ஓய்வறை...
இந்​தியா - பாகிஸ்​தான் இடையி​லான கிரிக்​கெட் போட்​டிக்​குத் தடை கோரிய மனுவை விரைந்து விசா​ரிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. ஊர்​வசி ஜெயின் உள்​ளிட்ட சட்​டக் கல்​லூரியை சேர்ந்த 4 மாணவர்​கள் தாக்​கல் செய்த ரிட் மனு​வில், கிரிக்​கெட் என்​பது இரு நாடு​களுக்கு இடையே நட்​பை​யும், இணக்​கத்​தை​யும் வெளிப்​படுத்​துவ​தாகும். பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு பாகிஸ்​தானுடன் இந்​தியா கிரிக்​கெட் விளை​யாடு​வது படை வீரர்​கள், பயங்​கர​வா​தி​களின் தாக்​குதலில் பலி​யான உறவினர்​களின் மன உறு​தியை குலைக்​கும். இதனால்...
சென்னை மாவட்ட பி-டிவிஷன் ஆடவர் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மாவட்ட மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் பிரிவில் 25 அணிகளும், மகளிர் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. போட்டியின் தொடக்க விழாவில் வருமான வரி தலைமை ஆணையர் சுதாகர ராவ், விக்ரம் ரதி, ஆர்வி.எம்.ஏ.ராஜன், வெற்றிவேல், சுரேஷ் குமார், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் செயல்...
மழையால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கார்டிஃப் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 9 ஓவர்களை கொண்டதாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்த...
ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி சமீபத்தில் முத்தரப்பு டி20 தொடரில் கோப்பையை வென்ற நிலையில் களமிறங்குகிறது. இன்றைய போட்டி நடைபெறும் துபாய் ஆடுகளம் சுழலுக்கு சாதகமானதாக அமையக்கூடும் என்பதால்...
பிசிசிஐ தலை​வ​ராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்​டியதை தொடர்ந்து கடந்த வாரம் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். பிசிசிஐ சட்​ட​வி​தி​களின்​படி 70 வயதை கடந்​தவர்​கள் பதவி​யில் தொடர முடி​யாது என்​ப​தால் இந்த முடிவை ரோஜர் பின்னி மேற்​கொண்​டிருந்​தார். இதற்​கிடையே அடுத்த பிசிசிஐ தலை​வ​ராக சச்​சின் டெண்​டுல்​கர் நியமிக்​கப்​படக்​கூடும் என ஊகங்​கள் எழுந்​தன. இந்​நிலை​யில், வரும் 28-ம் தேதி மும்​பை​யில் பிசிசிஐ ஆண்டு பொதுக்​கூட்​டம் நடை​பெறுகிறது....