தேசிய தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய வீரர் சத்தியன் 3-0 என்ற கணக்கில் டெல்லியை சேர்ந்த சுதான்ஷு குரோவரை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மேற்கு வங்​கத்​தின் அங்​கூர் பட்​டாச்​சார்ஜி 3-1 என்ற கணக்​கில் பெட்ரோலிய விளை​யாட்டு மேம்​பாட்டு வாரிய வீரர் பிரீயேஷ் ராஜ் சுரேஷையும், இந்​திய தணிக்கை மற்​றும் கணக்​குத் துறையை...
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, கொரியாவை தோற்கடித்தது. சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, கொரியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் வைஷ்ணவி விட்டல் பால்கே (2-வது நிமிடம்), சங்கீதா குமாரி (33-வது நிமிடம்), லால்ரெம்சியாமி (40-வது...
ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். அதேவேளையில் ஆடவர் பிரிவில் ஹெச்.எஸ்.பிரனாய், லக்‌ஷயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சனுடன் மோதினார். இதில் சிந்து 21-15, 16-21,...
ஆசியக் கோப்பை 2025 டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் செலக்‌ஷன் கோளாறுகள் குறித்த விவாதம் வேறு வடிவம் எடுத்துள்ளது. அதாவது சஞ்சு சாம்சனைக் காலி செய்யத்தான் ஷுப்மன் கில்லை அணியில் எடுத்துள்ளனர் என்பதே அது. இது உண்மைதான் என்று பலரும் கருத்து தெரிவித்துவிட்டனர். டெஸ்ட் போட்டிகள் இருந்ததால் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் இல்லாத போது பதிலி தொடக்க வீரராகத்தான் சஞ்சு சாம்சன் ஆடினார், என்று...
 ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா - ஐக்​கிய அரபு அமீரக அணி​கள் மோதுகின்​றன. 8 அணி​கள் கலந்​து​கொண்​டுள்ள ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடர் துபாய் மற்​றும் அபு​தா​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் இன்று இரவு...
புச்சி பாபு கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஹைத​ரா​பாத் அணி​கள் விளை​யாடின. சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்த இந்த ஆட்​டத்​தில் ஹைத​ரா​பாத் அணி முதல் இன்​னிங்​ஸில் 376 ரன்​களும், டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் 353 ரன்​களும் எடுத்​தன. 23 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஹைதர​பாத் அணி நேற்​றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 70 ஓவர்​களில்...
தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் உலகவில்வித்தைப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் பிரிவு போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் புஜே ஆகியோர் அடங்கிய அணி 235-233 என்றபுள்ளிகள் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. அதேபோல் கலப்பு அணிப் பிரிவில் இந்தியாவின் ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா வென்னம் ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப்...
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான சபலென்காவும், அமெரிக்க வீராங்கனையும், போட்டித் தரவரிசையில் 8-ம் நிலையில் இருப்பவருமான அமண்டா அனிசிமோவாவும்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) வருவாய் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடியாக அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள், ஸ்பான்ஸர் செய்யும் நிறுவனங்கள், விளம்பரங்கள், டிக்கெட் மூலம் வருவாய் என பலவழிகளில் பிசிசிஐ வருவாயை ஈட்டுகிறது. இந்நிலையில் பிசிசிஐ-க்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி வருவாய் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் வீரர் பிரேனலன் சுப்​ராயன் போட்​டிகளில் பந்​து​வீச சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில்​(ஐசிசி) அனு​மதி வழங்​கி​யுள்​ளது. தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணிக்​காக போட்​டிகளில் பங்​கேற்று வரு​கிறார் சுப்​ராயன். இந்​நிலை​யில் கடந்த மாதம் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான முதலா​வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் அவர் பங்​கேற்​றார். அப்​போது அவர் பந்​து​வீசுவ​தில் சந்​தேகம் இருப்​ப​தாக புகார் எழுப்​பப்​பட்​டது. இதைத் தொடர்ந்து ஆஸ்​திரேலி​யா​வின் பிரிஸ்​பேனிலுள்ள நேஷனல் கிரிக்​கெட் சென்​டரில், அவரது பந்​து​வீச்சு பரிசோதனை செய்​யப்​பட்​டது. சுயபரிசோதனை...