மெட்ரோ ரயில் இணைப்பு பால கர்டர் இடிந்து ஒருவர் உயிரிழந்த விவகாரம்: நாளை விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது
admin - 0
மணப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் இணைப்பு பாலப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கர்டர்கள் சரிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து, மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் குழுவின் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை 7 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. மொத்தம் 10 முதல் 13 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அதன்பிறகு, நாளை (ஜூன் 17) விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில்...
12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
admin - 0
தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணங்களை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கம் சென்னை எம்ஜிஆர் நகரில் நேற்று நடைபெற்றது....
ஆன்மிகம் மற்றும் இந்து மக்களுக்கு எதிரானது திமுக ஆட்சி என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் ஒலிக்கும் முருகா, வீரவேல் என்ற முழக்கம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்க வேண்டும். திமுகவின் ஆட்சி 8 மாதங்களுக்கு பிறகு இருக்காது.
தமிழகத்தில்...
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டு அரங்கில் முருகனின் அறுபடை வீடுகளின் கண்காட்சி இன்று தொடங்குகிறது என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மதுரையில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க அனைத்து அரசியல்...
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது அதிகபட்சமாக அவலாஞ்சியில் 292 மில்லி மீட்டர் மழை பதிவானது. கனமழை காரணமாக மாவட்டத்தில் 4 தாலுகாவிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த, 14 மற்றும் 15-ம் தேதிகள், ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பால், குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகா பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அந்தந்த பகுதிகளுக்கு...
டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சேலத்தில் நேற்று ரூ.1,649 கோடி மதிப்பில், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர் ஸ்டாலின், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் பிருந்தாதேவி வரவேற்றார். அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில்...
குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது – அன்புமணி மீது ராமதாஸ் மீண்டும் குற்றச்சாட்டு
admin - 0
உயிருள்ள என்னை உதாசீனம் செய்துவிட்டு, உருவப் படத்தை வைத்து உற்சவம் நடத்துகிறார் அன்புமணி. அவருக்கு தலைமைப் பண்பே கிடையாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாமக பிரச்சினைகள் ஊடகங்களுக்கு முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. சமரசப் பேச்சுவார்த்தை நடத்த 2 ஆளுமைகள் தைலாபுரம் வந்தார்கள், நானும் சென்னைக்குச் சென்றேன். ஆனால், பேச்சுவார்த்தை டிராவில் முடிந்து விட்டது. எந்த...
மத்திய அரசு திட்டங்களை முடக்குவதையே தமிழக அரசு கடமையாக கொண்டுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு
admin - 0
மத்திய அரசின் திட்டங்களை முடக்குவதையே தமிழக அரசு கடமையாக கொண்டுள்ளது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். பொது சிவில் சட்டம் மட்டும் நிலுவையில் உள்ளது. ஆனால், திமுக அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50 வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை.
பள்ளிகல்வித் துறை சார்ந்த மத்திய அரசின்...
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள்: அனைத்து சாதி அர்ச்சகர்கள் சங்கம் திடீர் வழக்கு
admin - 0
முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு எதிராக, அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மதுரை அம்மா திடலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்த...
கல்லூரிகளில் ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
admin - 0
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தஞ்சாவூரில் வரும் 15-ம் தேதி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து, கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறார். வரும் 16-ம் தேதி சரபோஜி அரசுக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
மேட்டூர் அணையில் முதல்வர் தண்ணீர் திறந்துவிட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் விதை...










