ஆன்மிகம் மற்றும் இந்து மக்களுக்கு எதிரானது திமுக ஆட்சி என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் ஒலிக்கும் முருகா, வீரவேல் என்ற முழக்கம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்க வேண்டும். திமுக
வின் ஆட்சி 8 மாதங்களுக்கு பிறகு இருக்காது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி. ஆன்மிகம் மற்றும் இந்து மக்களுக்கு எதிரானது திமுக ஆட்சி. இந்த ஆட்சி இருக்கக் கூடாது என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.
பாஜகவில் இருந்து நிறைய எம்எல்ஏக்கள் வருவார்கள் என்று உறுதி அளிக்கிறேன். பாஜக எம்எல்ஏக்கள் யாத்திரையாக சட்டப்பேரவைக்கு செல்வார்கள். அதிமுக, பாஜக கூட்டணி உறுதி யாக உள்ளது” என்றார். முன்னதாக அவர், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் 107-வது பிறந்தநாளையொட்டி, விழுப்புரத்தில் உள்ள அவரது நினைவு அரங்கத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளது. கூட்டணி ஆட்சி குறித்து பேசி முடிவு செய்யப்படும். 2026-ல் பாஜக ஆட்சி என்று அண்ணாமலை கூறியது என்பது, ஒவ்வொருவரது பார்வையிலும் வேறுபாடு இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழ்நாடு தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. அவர்தான் அடுத்த முதல்வர்.
திருச்சியில் நடைபெற்ற ஒரு மாநாட்டுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றாலும், பெரியளவில் பேரணி நடை பெற்றுள்ளது. ஆனால், முருக பக்தர்கள் மாநாட்டுக்காக இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு கூட அனுமதி தர மறுக்கின்றனர். முதல்வர் என்பவர் எல்லோருக்கும் சமமாக நடந்து கொள்ள வேண் டும்.
திமுக ஆட்சி என்பது ஒரு தலைபட்சமான ஆட்சி. மார்க்கெட்டிங்-க்காக முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவில்லை. முதல்வர், சீமான் உட்பட அனைவரும் கலந்து கொள்ளலாம். மாநாட்டுக்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள். மாநாட்டுக்கான அழைப்பிதழ் கொடுக்க முதல்வர் நேரம் ஒதுக்க மறுக்கிறார். தவெக தலைவர் விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தமிழகம் ஆன்மிக பூமியாக மாறிக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ளன. திமுக கூட்டணியில் இருந்து சிலர் பாஜகவுக்கு வருவதற்கும் வாய்ப் புள்ளது” என்றார். அப்போது மாநில துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.