‘திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்க என்ன ஆதாரம் உள்ளது?’ என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரிய வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்குகள் 3-வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, “திருப்பரங்குன்றம்...
சென்னை அருகே பெரும்பாக்கத்தில் புதிதாக 135 மின்சார ஏசி பேருந்துகள் சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதன்முறையாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து ரூ.233 கோடி மதிப்பீட்டில் 55 மின்சார...
‘தமிழகத்தில் கஞ்சாவும் உற்பத்தியாகவில்லை, சாராயமும் காய்ச்சவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வரும் அவற்றை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்’ என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிஹார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினை உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தவறு செய்தால், உச்ச நீதிமன்றம் செல்வோம்.
தமிழகத்தில் கஞ்சாவும் உற்பத்தியாகவில்லை, சாராயமும் காய்ச்சவில்லை. வெளி...
பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்பு
admin - 0
சென்னையில் இருந்து ஆன்மிகச் சுற்றுலா சென்ற குழுவினர் பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது, மழை வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுனர் மற்றும் பிரம்மாம்பிகை கோயில் 4,560 அடி உயரமுள்ள பருவத மலையில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு நேற்று முன்தினம் அதிகாலை சென்னை திருவேற்காடு பகுதியிலிருந்து 15 பேர் வாகனத்தில் வந்துள்ளனர்.
இவர்கள்,...
கேப்டனின் தொகுதியில் பிரேமலதா போட்டியிட்டால் ஜெயிக்க வைப்பீர்களா? – மகனே கேட்டதால் மகிழ்ந்து நிற்கும் தேமுதிக!
admin - 0
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2006-ல் முதன்முதலில் போட்டியிட்டு வென்ற தொகுதி விருத்தாசலம், பாமக-வுக்கு செல்வாக்கான இந்தத் தொகுதியில் கேப்டன் தனித்துப் போட்டியிட்டு வென்றதால் தேர்தலுக்கு தேர்தல் இந்தத் தொகுதி தனித்த கவனத்தைப் பெற்று வருகிறது. அதுபோல இந்தத் தொகுதி மீதான தேர்தல் கணிப்புகள் இந்தத் தேர்தலுக்கும் இப்போதே பரபரக்க ஆரம்பித்துவிட்டன.
தொகுதிப் பங்கீட்டில் மதிமுக-வுடன் மனஸ்தாபம் ஏற்பட்டால் அந்தக் கட்சிக்குப் பதிலாக தேமுதிக-வை திமுக கூட்டணிக்குள் இழுத்துப் போடும் ஆயத்த...
அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை சுதந்திர தினத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் தமிழக சுகாதாரத் துறை முன்னணியில் உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 8-வது முறையாக சிறந்த மாநிலம் என்ற விருதை பெற்று தமிழகம்...
தமிழ்நாடு மணல் கழகம் அமைக்க கோரிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆறுகள், அரசு நிலங்கள் மற்றும் ரயத்துவாரி நிலங்களில் சட்டவிரோதக் குவாரிகள் மூலம் விதிகளை மீறி உவர், சவடு, கிராவல் மணல் அள்ளப்படுகிறது. இதனால் இயற்கை வளம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
வைகை, காவிரி, பாலாற்றில் மணல் அள்ளியதால் இயற்கை நீரோட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றடையவில்லை. நிலத்தடி...
சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக அரசு திட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் குற்றச்சாட்டு
admin - 0
சர்வாதிகார ஆட்சி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார். நாகூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்டு ஆட்சி செய்து வருகிறது.
வாக்காளர் பட்டியலை ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை மட்டுமே திருத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், சட்டத்தில் இல்லாத சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல்...
பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காத நிலையில் 10-வது நாளாக நேற்றும் ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், ஏற்கெனவே என்யூஎல்எம் திட்டம் மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணியை தொடர வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு, இரவு, பகலாக அங்கேயே தங்கி, நேற்றும் 10வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுவரை...
“தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டுத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது. பெங்களூரு மஹாதேவபுரா தொகுதியில் நடந்தது ஏதோ நிர்வாகத் தவறு அல்ல. அது, வாக்கு...









