வாளுக்குப் பதில் வேல்… திமுகவினரையும் திருப்பிவிட்ட பாஜக! – முருகனை தூக்கிப் பிடிக்கும் தமிழக அரசியல் களம்!
admin - 0
அரசியல் படுத்தும் பாடு, திமுக-வினரும் தங்களை அறியாமலேயே இப்போது முருகன் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தளவுக்கு தமிழ்க் கடவுளாம் முருகனை முன்வைத்து இப்போது தமிழக அரசியல் களம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.
2021-ல் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததாக சர்ச்சை வெடித்து, அந்த சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பாஜக கடுமையாக எதிர்வினையாற்றியது....
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நிபந்தனை விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம்: இந்து முன்னணி குற்றச்சாட்டு
admin - 0
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நிபந்தனை விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவல் துறை அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஜூலை 2-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் காவல் துறையினருக்கு சுய ஒழுக்கம் அவசியம் என்ற தலைப்பில் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த ஆலோசனையிலேயே அடுத்த மாதம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி...
கோயில் காவலாளி மரண விவகாரம்: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – மனித உரிமை ஆணையம் உத்தரவு
admin - 0
கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலராகப் பணியாற்றியவர் அஜித் குமார். இவர், காரில் இருந்த 10 பவுன் நகைகளை திருடியதாக மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக...
மத்திய அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்த திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா, டெல்லியைப்போன்று, தமிழகத்திலும் ஆட்சியமைப்போம் என தெரிவித்திருந்தார். இதை கடுமையான சொற்களால் திமுக எம்.பி. ஆ.ராசா விமர்சித்திருந்தார்.
அதற்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, ஆ.ராசாவைக் கண்டித்து ஜூலை 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என...
ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளாததே பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
admin - 0
சிவகாசி பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே வெடி விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவதாக எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது:
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழக அரசின் நிர்வாக கவனிப்பின்மை காரணமாகவே, சிவகாசி பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இனியாவது பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வு மேற்கொள்ள மாவட்ட அளவிலான சிறப்புக்குழுவை அரசு நியமிக்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்யாமல், தொடரும்...
ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் பயணமாக நே;ற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் இன்று அல்லது நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை.
விதிகள்படி புதிய ஆளுநர் பதவியேற்கும்வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடருவார் என்பதால், அவர் ஆளுநராக உள்ளார். இதனிடையே, தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நீடித்து வருவதால், அடிக்கடி...
முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு
admin - 0
முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்து முன்னணி சார்பில், மதுரையில் கடந்த 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் அரசியல், மதம், பொது அமைதிக்கு எதிராகப் பேசக்கூடாது என்பன உள்ளிட்ட...
அரசியல் அழுத்தம் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
admin - 0
அரசியல் அழுத்தங்கள் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டனைச் சேர்ந்தவர் கவின்குமார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). திருமணமான 3 மாதங்களில் ரிதன்யா விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
தனது தற்கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் எனக் கூறி தந்தைக்கு வாட்ஸ்அப் ஆடியோ பதிவு அனுப்பியிருந்தார். இதையடுத்து, ரிதன்யா...
தீபாவளி, பொங்கல் என்றால் ஒருசில திமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு அன்பளிப்பு கொடுத்து அசத்துவார்கள். அதுவும் ஆளும் கட்சியாக இருந்துவிட்டால் இந்தக் ‘கவனிப்பு’ கொஞ்சம் தாராளமாகவே இருக்கும். ஆனால், இப்போது தீபாவளியும் இல்லை... பொங்கலும் இல்லை. ஆனலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள கிளைக் கழக நிர்வாகிகள் தொடங்கி அத்தனை பேருக்கும் ரூபாய் ஐயாயிரத்தில் தொடங்கி அன்பளிப்புகளை தந்து அசத்திக் கொண்டிருக்கிறார் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக...
வருமானம் ஈட்டிய அஜித்குமாரை இழந்ததால், அவரது குடும்பம் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் மாலதி. இவர் மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த பாலகுருவை திருமணம் செய்தார். இவர்களது மகன்கள் அஜித்குமார், நவீன்குமார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பாலகுரு உயிரிழந்த நிலையில், தனது 2 குழந்தைகளுடன் மடப்புரத்துக்கு வந்த மாலதி, உறவினர்கள் ஆதரவுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் தென்னை தட்டி...










