Google search engine
அமைச்​சர் துரை​முரு​கன் மற்​றும் அவரது மனை​விக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​ வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்​துள்ள உச்ச நீதி​மன்​றம், இந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் தமிழக அரசு பதில் அளிக்​க​வும் உத்தரவிட்டுள்​ளது. தமிழக நீர்​வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன் கடந்த 2006-11 திமுக ஆட்​சி​யில் பொதுப்​பணித் துறை அமைச்​ச​ராக இருந்​தார். அப்​போது, 2007-09 கால​கட்​டத்​தில் வரு​மானத்​துக்குஅதி​க​மாக ரூ.1.40 கோடி அளவுக்கு சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக துரை​முரு​கன், அவரது மனைவி...
திருச்சியில் புதை சாக்கடை அடைப்பை அகற்றும் பணியி்ல் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியில் புதை சாக்கடை குழாயின் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அடைப்பை அப்புறப்படுத்துவதற்காக மாநகராட்சியில் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களான கள்ளக்குறிச்சி...
துறையூர் அருகே அரசுப் பள்ளியில் முதல்வர் திறந்து வைத்த ஒரே ஆண்டில் கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து இளைநிலைப் பொறியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 34 பேர் படித்து வருகின்றனர். 2 வகுப்பறை கொண்ட கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இதனிடையே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்...
நெல்லையில் 1712-ம் ஆண்டில் அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட செப்பு பட்டயம் அடிப்படையில் 1,100 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என பள்ளி வாசல் நிர்வாகம் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. செப்பு பட்டயம் அடிப்படையில் 2.34 ஏக்கர் நிலம் மட்டுமே பள்ளிவாசலுக்கு சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நெல்லையில் 1,100 ஏக்கர் நிலத்துக்கு கண்டியப்பேரி கான்மியா பள்ளிவாசல் உரிமை கோரிய வழக்கில் பள்ளிவாசல் முத்தவல்லிக்கு...
நாகர்கோவிலில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் அமர்வதற்கு சாலையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த நிலையில், அந்த வழியாக ஆம்புலன்ஸை அனுமதிக்க வேண்டாம் என, மேடையில் மேயர் மகேஷ் பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகே கடந்த 20-ம் தேதி மாலை ‘ஓரணியில் தமிழ்நாடு’ தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். கூட்டம் நடைபெற்ற அண்ணா விளையாட்டரங்கம் முன்னால் போக்குவரத்து...
அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை சேலத்​தில் உள்ள அவரது இல்​லத்​தில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சந்​தித்​துப் பேசினார். பழனி​சாமி பிரச்​சா​ரத்​தின்​போது வரும் கூட்​டம், நிச்​ச​யம் வாக்கு களாக மாறும் என்று அவர்தெரி​வித்​தார். சேலத்​தில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க வந்த பாஜக மேலிடப் பார்​வை​யாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்​டோர், நெடுஞ்​சாலை நகரில் உள்ள பழனி​சாமி வீட்​டுக்​குச் சென்​று, ஒரு மணி நேரத்​துக்​கும்...
போக்சோ வழக்​கில் புகார் அளிக்க கால​வரம்பு நிர்​ண​யம் செய்​ய​வில்​லை. பல சந்​தர்ப்​பங்​களில் குற்​ற​வாளி குடும்ப உறுப்​பின​ராகவோ அல்​லது உறவினருக்கு தெரிந்த நபராகவோ இருப்​ப​தால் புகார் அளிக்க தயங்​கு​கின்​றனர் என்று உயர் நீதிமன்றம் தெரி​வித்​துள்​ளது. தென்​காசி​யைச் சேர்ந்​தவர் நீல​கண்​டன். ஒரு பெண் மற்​றும் அவரது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக இவர் மீது போலீ​ஸார் 2 வழக்​கு​கள் பதிவு செய்​தனர். இந்த வழக்​கு​களை ரத்து செய்​யக் கோரி, உயர்...
 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக-தவெக இடையே​தான் போட்டி என்று தவெக தலை​வர் விஜய் கூறியது அவரது தனிப்​பட்ட கருத்​து, மக்​களின் கருத்து அல்ல என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். சேலம் மாவட்​டம் எடப்​பாடி​யில் நேற்று அதி​முக நகரம், ஒன்​றிய, பேரூர் கட்சி நிர்​வாகிளை சந்​தித்​துப் பேசிய அவர், கட்​சி​யினருடன் ஆலோ​சனை மேற்​கொண்​டார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக-தவெக இடையே​தான் போட்டி என்று தவெக தலை​வர்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை பகுதியில் நேற்று முன்தினம் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, காவல் துறை விதித்த நிபந்தனைகளை மீறி, மரங்கள், கட்டிட மேற்கூரைகள், கட்டிடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏறி நின்றனர். விஜய் பேசிய இடத்துக்கு அருகில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் மீதும் ஏராளமான தொண்டர்கள் ஏறி அமர்ந்ததால், அது பாரம் தாங்காமல்...
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை அரசு மேல் நிலைப்பள்ளியில், திமுக கொடி கலரில் தயாரான கேக்கை வெட்டி கொண்டாடிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் பஞ்சாயத்துக்கு இழுத்து அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது பாஜக. திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ-வும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் 73-வது பிறந்த நாள் 19-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை வித்தியாசமாக கொண்டாட நினைத்த அவரது ஆதரவாளர்கள், ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிறந்த நாள் விழாவுக்கு...