Google search engine
கரூரில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து அரசியல் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, ரோடு ஷோக்களில் நெரிசலைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மதுரை பூத குடியைச் சேர்ந்த கே.கதிரேசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழகத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ரோடு ஷோ மற்றும் மாநாடுகளில் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் தவறுகளால் கட்சியினர்,...
அகவை முதிர்ந்த தமிழறிஞர்​கள் அரசின் சார்​பில் மாதம்​தோறும் ரூ.8,000 உதவித்​தொகை பெற விண்​ணப்​பிக்​கலாம் என்று தமிழ் வளர்ச்​சித் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்​சித் துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அகவை முதிர்ந்த தமிழறிஞர்​களுக்கான உதவித்​தொகை பெறுவதற்கான விண்​ணப்​பப் படிவத்தை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலை​தளத்​தில் பதி​விறக்​கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்​ணப்​பங்​களை அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் இயங்​கி வரும் மண்​டல, மாவட்ட தமிழ் வளர்ச்​சித் துறை இயக்​குநர், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்​குநர்...
தூத்​துக்​குடி துப்​பாக்​கிச் சூடு சம்​பவத்தை டிவி​யில் பார்த்து தெரிந்து கொண்ட பழனி​சாமி​தான், கரூர் சம்​பவத்​தில் துரித​மாக செயல்​படும் முதல்​வர் ஸ்டா​லின் மீது பழி​போடு​கிறார் என்று அமைச்​சர்​கள் மா.சுப்​ரமணி​யன், அன்​பில் மகேஸ் தெரிவித்​துள்​ளனர். இதுகுறித்து சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​ரமணி​யன் வெளி​யிட்ட அறிக்​கை: கரூர் துயரச் சம்​பவத்​தி​லும் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி அதி​லும் அரசி​யல் செய்து வரு​கிறார். காவல்​துறை​யின் கட்​டுப்​பாடு​கள் எதை​யும் தவெக பிரச்​சா​ரத்​தில் கடைப்​பிடிக்​க​வில்​லை. ‘ஆள் இல்​லாமல் ஆம்​புலன்ஸ் வந்​தால் ஓட்​டுநரே...
கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை ஆணை​யத் தலை​வர் நேற்றும் விசா​ரணை நடத்தினார். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயி​ரிழந்​தனர். 110-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்​நிலை​யில், தீவிர சிகிச்​சைப் பிரி​வில் இருந்த வேலு​சாமிபுரத்தை சேர்ந்த சுகுணா(65) என்​பவர் நேற்று உயி​ரிழந்​தார். இதையடுத்​து, உயி​ரிழந்​தோர்...
தவெக வழக்​கறிஞர் அறிவழகன் மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தவெக தலை​வர் விஜய் கரூரில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​ட​போது போலீ​ஸார் போக்​கு​வரத்தை சீர்​செய்​ய​வில்​லை. பாது​காப்​புக்கு போது​மான காவலர்​களை நியமிக்​க​வும் இல்​லை. கரூர் கூட்​டத்​தில் போலீ​ஸார் குழப்​பத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளனர். திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​ பாலாஜி சதி​யால் 41 பேர் உயி​ரிழந்​தனர். அதற்​கான ஆதா​ரங்​களை நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​வோம். உயர் நீதி​மன்​றம் அனு​மதி அளித்​தால், பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களை சந்​தித்து ஆறு​தல் கூற விஜய்...
திண்​டிவனத்​தில் உள்ள அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகத்தை தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கடந்த வாரம் சந்​தித்​தார். இந்​நிலை​யில், தைலாபுரத்​துக்கு முன்​னாள் அமைச்​சர் சி.​வி. சண்​முகம் நேற்று சென்​று, பாமக நிறு​வனர் ராம​தாஸிடம், தனது குடும்​பத்​தில் நடை​பெறும் திரு​மணத்​துக்​கான அழைப்​பைக் கொடுத்​தார். பின்​னர் இரு​வரும் சிறிது நேரம் ஆலோ​சனை நடத்​தினர். இதுகுறித்து பாமக தரப்​பில் கேட்​ட​போது, “தமிழகத்​தின் அரசி​யல் கள நில​வரம் குறித்து இரு​வரும் ஆலோ​சனை நடத்​தினர். தமிழகத்​தில்...
கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு விவ​காரத்​தில் யாரை​யும் குற்​றம்​சாட்ட விரும்​ப​வில்லை என்று மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறி​னார். கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு மத்​திய அமைச்​சர்​கள் நிர்​மலா சீதா​ராமன், எல்​.​முரு​கன் ஆகியோர் நேற்று ஆறு​தல் கூறினர். மேலும், சம்​பவம் நடை​பெற்ற வேலுசாமிபுரத்​துக்கு சென்று பார்​வை​யிட்​டனர். பின்​னர், ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நிர்​மலா சீதா​ராமன் கூறிய​தாவது: நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்​கும், காயமடைந்து சிகிச்சை...
கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்.27) அன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக இன்றும் (செப். 29-ம் தேதி) விசாரணை மேற்கொண்டு வருகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 41 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், 110 பேர் காயமடைந்து அரசு மற்றும்...
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்தில் காட்டத்தை கிளப்பி இருக்கும் நிலையில், திமுக-வை விட்டுவிட்டு அதன் கூட்டணிக் கட்சிகளை பழனிசாமி வம்புக்கிழுத்துப் பேசுவது ஏன் என்ற சர்ச்சையும் வெடித்திருக்கிறது. அ​தி​முக - பாஜக உடன்​படிக்கை ஏற்​படு​வதற்கு முன்பு திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கும் சில கட்​சிகளுக்​கு, அந்​தப் பக்​கம் அணி மாறி​விடலாமா என்ற சபல​மும் லேசு​பா​சாக இருந்​தது....
கரூர் சம்பவம் காரணமாக தவெகவை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்த மனு: கரூரில் 27.9.2025 அன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் அரசியல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட போதிலும், குழந்தைகள், பெண்கள்...