ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் வனப்பகுதியில் நேற்று அதிகாலை 5 சிறிய ஒராங்குட்டான் குட்டிகள் உலா வந்த அரிதான காட்சி உள்ளூர் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, அந்த அரியவகை குரங்குகளை வனத்துறையினர் உடனடியாக சென்று மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து பாலசோர் கோட்ட வன அதிகாரி பிரதீக் பிரகாஷ் இந்தால்கர் கூறியதாவது: பாலசோரின் போக்ராய் பகுதியில் உள்ள படாபாய் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் அதிகாலை 6...
இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுராந்தகத்தில் பரந்தாமன், தாராபுரத்தில் சுகன்யா போட்டி
admin - 0
தமிழகத்தில் காலியாகவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், திமுக தனது வேட்பாளர்களை நேற்று அறிவித்தது.
அதன்படி, வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) தொகுதியில் இ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் (தனி) தொகுதியில் எஸ்.சுகன்யா போட்டியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
அதில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
“யார் என்ன கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும்” என்று மிசாவில் கைதானது குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளார்.
அந்த வீடியோ பதிவின் விவரம்: “அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும், நம்முடைய கட்சியினருக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன்.
அதுவும், இந்த சர்ச்சையில் முக்கியமாக என்னுடைய...
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்ட உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம், தேநீர் கடையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, உணவகம் சுகாதாரம் இல்லாமலும், அசுத்தமாகவும் இருந்தது. இதையடுத்து, நோயாளிகளின் நலன் கருதி அந்த உணவகத்தின் உரிமத்தைஉடனடியாக ரத்து செய்த அதிகாரிகள், விற்பனை செய்வதற்கு...
பிரதமரிடம் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு: ‘விக்சித் பாரத்’ உரையாடலில் பங்கேற்க செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்
admin - 0
விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் செப்.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் தமிழகப் பிரிவு இயக்குநர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளான ஜன.12-ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் என்ற நிகழ்வு டெல்லியில் உள்ள...
ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட கோரி அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் நாளை வேலைநிறுத்தம்
admin - 0
ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுவது உள்பட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (செப்.11) வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு தலைவர் ஜவஹர், பொதுச்செயலாளர் ஜெ.ரோஷன் கார்க்கி, தலைவர் விவேக்ராஜா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்குவதை தடுப்பது முக்கியக் கோரிக்கையாகும்.
2026-ம்ஆண்டு மார்ச் வரையிலான நிதியாண்டு...
‘மிசாவில் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதல்வர் விஜய் கொச்சைப்படுத்துகிறார்’ என்று திமுக எம்எல்ஏக்கள் விமர்சித்துள்ளனர்.
சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திமுக கொறடா எ.வ.வேலு கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 116 நாட்களில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள் என மொத்தம் 550 குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்களுடன் ஆதாரங்
களை முன்வைத்தார்.
இதற்கு முதல்வர்...
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் குடிநீர், சாலைப் பணிகளை முடிக்க வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்
admin - 0
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் நிறைவு பெறாத குடிநீர், கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் சாலைப் பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழைக்கு முன்...
தமிழகத்தில் கோயில் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத் துறையை தனித் துறையாக உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் இத்துறை, ‘சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை’ என்ற கூட்டுத் துறையின்கீழ் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்தது. புதிய ஆட்சி அமைந்ததும், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் கீழ் அறநிலையத்துறை இணைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நிர்வாக வசதிக்காகவும், பணிகளை துரிதப்படுத்தவும், இது தனித் துறையாக மாற்றப்பட்டுள்ளது....
தமிழக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் தலைவராக விஜய் வசந்த் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுக்கான மாநிலத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் முன்மொழிவுக்குக் காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. அதன்படி பிரிவின் மாநிலத் தலைவராக விஜய் வசந்த், ஒருங்கிணைப் பாளர்களாக சக்தி...









