காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
பின்னர் தமிழக அரசின் சார்பில், “காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி வறட்சி காலத்தில் செப்டம்பர் மாதத்தில் தமிழகத்துக்கு 7.8 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த...
முதல்வர் பஞ்ச் டயலாக் பேசுகிறார்; சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: உதயநிதி குற்றச்சாட்டு
admin - 0
‘முக்கிய கேள்விகளுக்கு பதில் தராமல் பஞ்ச் டயலாக் மற்றும் சினிமா வசனங்களை முதல்வர் பேசியுள்ளார். பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அளித்த பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவையில் பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியதாவது. கடந்த 3-ம்...
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம்: 25 ஏக்கர் நிலத்தை வழங்க முன்வந்த வீட்டு வசதி வாரியம்
admin - 0
முதல்வர் விஜய் அறிவித்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் உள்ள 25 ஏக்கர் வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகம் கடும் இட நெருக்கடியில் இருப்பதால், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை வேறு இடத்துக்கு மாற்ற நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராணுவத்துக்கு சொந்தமான புனித ஜார்ஜ் கோட்டையில்தான் தற்போது தலைமைச் செயலகம் மற்றும்...
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பழநி முருகன் கோயில் முன்மாதிரியாக உயர்த்தப்படும்: அமைச்சர் ரமேஷ்
admin - 0
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பழநி முருகன் கோயில் முன்மாதிரி கோயிலாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ரவி மனோகரன் (பழநி தொகுதி) பேசும்போது, “பழநி முருகன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
அங்கு கோயில் அன்னதான...
பெண்கள் குறித்து அவதூறாகப் பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்: பேரவையில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
admin - 0
பெண்கள் குறித்து யாராவது இரட்டை அர்த்தத்திலோ, அவதூறாகவோ பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று முதல்வர் விஜய் எச்சரித் துள்ளார்.
சட்டப்பேரவையில் காவல், தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் விஜய் நேற்று பேசியதாவது: அரசியல்ரீதியில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கலாம். அது கடுமையாகக்கூட இருக்கலாம்.
யாருடைய கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தனிப்பட்ட முறையில் மக்களையோ, பெண்களையோதரம் தாழ்த்திப் பேச வேண்டாம். இது...
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி ஊழல் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சார்பில் கடந்த 4-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கே.என்.நேருவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 5-ம் தேதி சோதனை நடத்தினர்.
13 பேர் பட்டியல்
இந்த முறைகேடு தொடர்...
“பட்டியல் இன மக்கள் அரசியல் சக்தியாக வலிமை பெற்றால் முதல்வர் பதவி கிடைக்கும்” – திருமாவளவன் எம்.பி.
admin - 0
கோவை வேலந்தாவளம் பகுதியில் நேற்று நடைபெற்ற யோகா கல்லூரி நிகழ்வில், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, தமிழக அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் திருமாவளவன் எம்.பி. கூறியதாவது: இந்நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சரிடம் மலைவாழ் மக்களுக்கு அவர்களுடைய நலத்திட்டங்களை மேம்படுத்துதல், வீடு கட்டுதல், சாதிச் சான்றிதழ் வழங்குதல்...
விவசாயிகள், ஆசிரியர் வழக்கை ரத்து செய்தது போல் அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை
admin - 0
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததை போல், திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுத் தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று பதில் அளிக்க இருக்கிறார். சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின் போது, மருத்துவர் பணியிடங்களை...
பூம்புகார் ஆழ்கடலில் 3-ம் கட்ட அகழாய்வு தொடக்கம்: ஸ்கூபா டைவ் அடித்து ஆய்வு செய்த அமைச்சர் ராஜ்மோகன்
admin - 0
பூம்புகாரில் ஆழ்கடலில் ஸ்கூபாடைவ் அடித்து 3-ம் கட்ட அகழாய்வு பணியை பள்ளிக் கல்வி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று தொடங்கிவைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பழந்தமிழர் நாகரிகத்தின் தொன்மையை கண்டறியும் வகையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் 2025 மற்றும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2 கட்டங்களாக கடல்சார் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், கடலில் மூழ்கிய பண்டைய பூம்புகாரின் கட்டிடங்கள், சுற்றுச்சுவர்,...
தனிப்பட்ட குற்றச் சம்பவங்கள் ‘மாநில சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு’ அல்ல: பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை
admin - 0
“ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்பதால் மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று சொல்லிவிட முடியாது. தனிப்பட்ட குற்றச் சம்பவங்களுக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு உள்ளது” என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு
காவல் துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய்...









