பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது: பசுமை தீர்ப்பாயம்
admin - 0
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது. சிலைகளை வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி, நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதால் மாசு ஏற்படுகிறது. அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்...
மின்வாரியத்தில் கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு ஊழியரின் மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்
admin - 0
மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கு ஊழியர்களின் மருத்துவச் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு கோரும் விண்ணப்பதாரர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளை பரிசீலிக்கும்போது, வாரிய சேவை விதி எண் 84-ன் கீழ் பரிந்துரை செய்யப்பட்ட படிவத்திலேயே, ஊழியரின் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், 55 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களுக்கு வயது முதிர்வு,...
“காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் தமிழகத்தில் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது” என மின்வெட்ட்டுப் பிரச்சினை குறித்து தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது....
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் உபயதாரர்கள், அரசியல் கட்சியினர், முக்கிய விஐபிகளுக்கே ‘பாஸ்’களை வாரி வழங்க திட்டமிடப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கோயில் நிர்வாகம், அமைச்சர், எம்எல்ஏ-க்கள் தரப்பினரிடையே இணக்கம் இல்லாத சூழலால் ‘பாஸ்’ விநி யோகத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா செப்.17-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கோயில் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதியில்...
மறைந்த பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவின் உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவர் தனது உடலை தகனம் செய்ய விரும்பியிருந்ததால், அதன்படி தகனம் செய்யப்பட்டது.
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். மதுரையில் அவரது உடலுக்கு தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், திரளானோர் அஞ்சலி...
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். நேற்று இரவு 10 மணி அளவில் சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்ற முதல்வர், அங்கிருந்து மற்றொரு விமானத்தில் லண்டன் சென்றார்.
லண்டனில் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கும் முதல்வர் விஜய், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன்...
‘மிசா’ சட்டத்தில் கைதாகி நான் அடிவாங்கிய தழும்புகள் இன்னமும் இருக்கின்றன: மு.க.ஸ்டாலின் விளக்கம்
admin - 0
மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். “இன்றைக்கும் நான் அடிவாங்கிய தழும்புகள் எனக்கு இருக்கின்றன. யார் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தை கருணாநிதி எதிர்த்ததால், அன்றிருந்த மத்திய அரசு திமுக ஆட்சியைக் கலைத்தது. உடனடியாக, மிசா சட்டத்தில் என்னைக்...
வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: தொடர் விடுமுறையால் வங்கி சேவைகள் 4 நாட்கள் பாதிக்கும்
admin - 0
வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளரும், வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளருமான சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: கடந்த 2024 மார்ச்சில் கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தத்தில், வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வங்கி நிர்வாகங்கள் சம்மதித்தன.
இதற்காக, திங்கள் முதல் வெள்ளி...
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் வி.எஸ்.பாபு. கடந்த ஒரு மாத காலமாக நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்று வந்த அவருக்கு, கடந்த சில நாட்களாக மார்பு சளி பாதிப்பு அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது வீட்டில் ஓய்வில் இருந்த வி.எஸ்.பாபுவுக்கு...
காட்பாடி அருகே தேவாலய கட்டுமான பணியின்போது சாரம் சரிந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந் துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் அருகே மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. தமிழக - ஆந்திர எல்லையோரம் உள்ள இந்த கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த தேவாலயத்தின் மேல்தளம் அமைக்கும் பணி நேற்று நடை பெற்றது.
இதில்,...









