சிவகாசி அருகே இரு தரப்பினர் இடையே மோதல், கல்வீச்சு: போலீஸார் வழக்குப் பதிவு

0
24

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கல் வீசப்பட்டதால் பரபரப்பு. மோதலை கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கல்வீச்சு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் ஒரு வரத்திற்கு முன் எம்.புதுப்பட்டி சாலையோரம் உள்ள இடத்தில் ஒரு தரப்பினர் ஃபிளக்ஸ் பேனர் வைக்க முயன்றபோது, அது பட்டா நிலம் எனக் கூறி மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று அதே இடத்தில் வேறு ஒருவர் ஃபிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த முறை எங்களுக்கு ஃபிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி அளிக்காத நிலையில், இப்போது எப்படி அதே இடத்தில் பேனர் வைக்கலாம் என எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நமஸ்கரித்தான்பட்டியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் தலைமையில் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளர். அப்போது, கூட்டத்தில் கல் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் இருதரப்பினர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே மோதல் தடுக்க காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.

இதையடுத்து மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார், விருதுநகர் எஸ்பி கவுதம் கோயல் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, கல்வீச்சு தொடர்பாக இரு தரப்பிலும் தலா 3 பேர் உட்பட 6-க்கும் மேற்பட்டோர் மீது திருத்தங்கள் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இரு சமூகத்தினரிடையே எந்த மோதலும் ஏற்படவில்லை. இரவில் ஒரு தரப்பினரிடம் சாலையில் சிலர் கற்களை வீசியதால் ​​லேசான தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இப்பிரச்சனைக்கு சமூக தீர்வு காண்பதற்காக அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here