கோயில் இணை ஆணையர்கள் 6 பேர் திடீர் பணியிட மாற்றம்: அறநிலையத் துறை உத்தரவு

0
23

திரு​வேற்​காடு தேவி கரு​மாரி அம்​மன் கோயில் இணை ஆணை​ய​ராக பணி​யாற்றி வந்த க.ரா​மு, இந்து சமய அறநிலை​யத் துறை சென்​னை-1 இணை ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். முன்​ன​தாக அப்​ப​தவிக்கு நியமிக்​கப்​பட்​டிருந்த பா.​விஜ​யா​வின் நியமனம் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.

மதுரை மண்​டலத்​துக்கு பணி​யிட நியமனம் வழங்​கப்​பட்​டிருந்த கி.ரேணு​காதே​வி-​யின் அந்த நியமனம் ரத்து செய்​யப்​பட்​டு, அவர் திரு​வேற்​காடு தேவி கரு​மாரி அம்​மன் கோயில் இணை ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

காஞ்​சிபுரத்​துக்கு பணிநியமனம் வழங்​கப்​பட்​டிருந்த தி.அனி​தா-​வின் அந்த உத்​தரவு ரத்து செய்​யப்​பட்​டு, அவர் சென்னை மண்​டலம்-3 இணை ஆணை​ய​ராக மாற்​றப்​பட்​டுள்​ளார்.

சென்னை மண்​டலம்-3 இணை ஆணை​ய​ராக முன்​னர் நியமிக்​கப்​பட்​டிருந்த க.ரமணி​யின் நியமனம் ரத்து செய்​யப்​பட்​டு, அவர் இந்து சமய அறநிலை​யத் துறை தலை​மை​யிடத்​தின் சரி​பார்ப்​புப் பிரிவு இணை ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டு உள்​ளார்.

சென்​னை-1 நியமனம் ரத்து செய்​யப்​பட்ட பா.​விஜ​யா, திரு​வண்​ணா​மலை மண்டல இந்து சமய அறநிலை​யத்​துறை இணை ஆணை​ய​ராகப் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

தலை​மை​யிட சரி​பார்ப்​புப் பிரிவு இணை ஆணை​ய​ராக முன்​னர் நியமிக்​கப்​பட்​டிருந்த சி.குமரதுரை-​யின் அந்த நியமனம் ரத்து செய்​யப்​பட்​டு,

அவர் காஞ்​சிபுரம் மண்டல இணை ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

பணி​யிட மாறு​தல் பெற்​றுள்ள அதி​காரி​கள் அனை​வரும் உடனடி​யாக தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட புதிய பொறுப்​பு​களில் இணைந்து பணி​யாற்ற அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here