சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மற்றும் வழக்காடும் மொழியாக்கக்கோரி வழக்கறிஞர் பகவத்சிங் தலைமையில் வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் என 24 பேர் கடந்த பிப்.28-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டம் தொடர்பாக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவரும், பாமக வழக்கறிஞர் அணி செய்தி தொடர்பாளருமான கே.பாலு உயர் நீதிமன்றத்தில் தலைமை...
போக்குவரத்து ஊழியர்களுக்கு மேலும் ஒரு மாத அகவிலைப்படி உயர்வு: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உறுதி
admin - 0
பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள மேலும் ஒரு மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன.
இதுதொடர்பாக...
நாட்டை காக்கும் பெரும் பொறுப்பை சுமக்கும் அளவுக்கு திமுகவின் வலிமை கூடியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
admin - 0
அன்று தமிழகத்தை காத்த நிலையில், இன்று நாட்டை காக்க வேண்டிய பெரும் பொறுப்பை சுமக்கும் அளவுக்கு திமுகவின் வலிமை கூடியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டசமூக வலைதளப்பதிவில் கூறியிருப்ப தாவது: மார்ச் 6 - இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள். பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுகவின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப் புரட்சியை...
பெண்கள் பாதுகாப்புக்கான உதவி மைய எண் மற்றும் எழுத்து வடிவில்: 5,050 பெண் போலீஸார் திரண்டு உலக சாதனை
admin - 0
பெண்கள் பாதுகாப்புக்கான உதவி மைய எண்கள் மற்றும் எழுத்து வடிவில் 5,050 பெண் போலீஸார் ஒரே நேரத்தில் திரண்டு உலக சாதனை படைத்துள்ளனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைவரும் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக சாதனை மேற்கொள்ளவும் சென்னை போலீஸார் முடிவு செய்தனர்.இதற்காக நேற்று மாலை சென்னை காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான 5,050 பெண் போலீஸார்...
தமிழை வழக்காடு மொழியாக்க தீர்மானம்; வழக்கறிஞர்களின் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு: அரசின் உறுதிமொழி ஏற்பு
admin - 0
சென்னை, உயர்நீதிமன்றத்தில் தமிழைவழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே கடந்த மாதம்28-ம் தேதி வழக்கறிஞர் பகத்சிங் தலைமையிலும், வழக்கறிஞர் பாவேந்தன்ஒருங்கிணைப்பிலும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது.வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரிமாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என24 பேர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரு வாரத்துக்கு மேலாக அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, திமுக அமைப்பு செயலாளர்...
நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவாக வங்கிகள் உதவ வேண்டும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்
admin - 0
நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவாக வங்கிகள் உதவ வேண்டும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு)சார்பில் 2024-25-ம் ஆண்டுக்கான மாநில கடன் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2024-25-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கையை வெளியிட்டுப் பேசியதாவது: நபார்டு வங்கி வெளியிட்டுள்ள வளம் சார்ந்த...
சொத்து குவிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், ஓபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணையை மார்ச் 25, 26-ம் தேதிகளுக்கு தள்ளி வைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலத்தில் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம் ஆண்டு...
கால்டுவெல், அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அய்யா வைகுண்டரின் 192-வது பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அய்யா வைகுண்டர் பற்றியும், கால்டுவெல் குறித்தும் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கால்டுவெல் தமிழகத் தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம்,...
123 ஆண்டுகள் பழமையான கட்டிடம் புதுப்பித்து காஞ்சிபுரத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம்
admin - 0
காஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் செங்கையில் இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. இதனையடுத்து நீதித் துறையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நேற்று முதன்மை மாவட்ட, அமர்வு நீதிமன்றம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிஅனிதா சுமந்த் நேற்று புதிய நீதிமன்றத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதேபோல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சோழிங்கநல்லூர் வட்டத்துக்கு என மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும்...
வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர் பட்டியலை மார்ச் 15-ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையின்கீழ் வரும் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் 50 சதவீத பணியிடங்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டு பதவி உயர்வு மூலம்...










