Google search engine
நீதிமன்றத் தீர்ப்புகளைக் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை 6 வாரங்களுக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை...
காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடமும் வாகனச் சோதனைகளின் போதும் கண்ணியமின்றி தேவையற்ற வார்த்தைகளைப் பேசும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அனைத்துக் காவலர்களுக்கும் வாக்கி டாக்கி மைக் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார். அவரின் இந்த எச்சரிக்கை ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் மதுரை பரவை சோதனை சாவடியில் பணியிலிருந்த சிறப்பு ஆய்வாளரான தவமணி பூ விவசாயி ஒருவரை ஆபாசமாகப் பேசியது...
ஒரே குற்ற சம்பவத்துக்கு இருதரப்பும் மாறி மாறி புகார் அளித்தால் அந்த வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து 3 நீதிபதிகள் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பாலாஜி, ராஜகுமாரி ஆகியோர் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கைரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது அவர்களுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்த கார்த்திக் என்பவரும் தனது...
“உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தனியார் நிறுவன மேலாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 15 லட்சத்திற்கும் கூடுதலான பணத்தை இழந்ததால் ஏற்பட்ட...
42 கோடி டன் நிலக்கரி இருப்பு கொண்ட ஒடிசா சகிகோபால் சுரங்கத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி செய்வதற்கு நிலக்கரியை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலக்கரி ஒடிசா மாநிலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுத்து கொண்டு வரப்படுகிறது. இதற்காக, 2016-ல் ஒடிசா மாநிலத்தில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கம் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த சுரங்கத்தில்...
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறைசார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.3,500 உதவித்தொகையும், மருத்துவ படியாக ரூ.500-ம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்கடந்த 2022-2023-ம் ஆண்டில் உதவித்தொகை பெற தேர்வுசெய்யப்பட்ட 100 பேருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்கலை.யில் நேற்று நடந்தது. இதில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். அவர் பேசும்போது, ‘‘அடுத்த ஆண்டுஇந்த உதவித்தொகை உயர்த்தி...
மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றாண்டை முன்னிட்டு, பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்து, கடந்த ஜூன் 4-ம் தேதி ரூ.100 மதிப்பிலான நாணயம் வெளியிடப்பட்டது.இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக ஆக.17-ம் தேதி சென்னை...
அடுத்த தேர்தலுக்கு முன்பாக ஜெய்ஸ்ரீராம், முருகனுக்கு அரோகரோ என முதல்வர் ஸ்டாலின் சொல்வார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தென்னிந்திய மீனவர் பேரவை தலைவர் ஜெய பாலையன் தலைமையில், துணைத் தலைவர்கள் ராம், கஜபதி மற்றும் பேரவையின் நிர்வாகிகள் பலர் பாஜகவில் நேற்று இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை...
கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (ஆக. 7) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது....
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில், ‘தனியார்மயம், ஒப்பந்தமுறை எதிர்ப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடந்த இக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: மருத்துவர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள்கூட இன்றைக்கு ஒப்பந்த ஊழியர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர். இப்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறைகளில் ஒப்பந்த முறை படிப் படியாக...