Google search engine
திருநெல்​வேலி மாவட்​டம் கூடங்​குளம் அணுமின் நிலை​யத்​தின் 5-வது அலகில், 320 டன் அணு உலை அழுத்​தகலன் வெற்​றிகர​மாக நிறு​வப்​பட்​டுள்​ளது. கூடங்​குளத்​தில், ரஷ்​யா​வின் பங்​களிப்​புடன் அணுமின் நிலை​யம் செயல்​பட்டு வரு​கிறது. அணுமின் திட்​டத்​தின் 5-வது அலகில், அணு உலை கட்​டிடத்​துக்​குள் ‘அணு உலை அழுத்​தக்கலன்’ (reactor pressure vessel) வெற்​றிகர​மாக நிறு​வப்​பட்​டுள்​ள​தாக, இந்​திய அணுசக்தி கழகம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக, சமூக வலை​தளத்​தில் அக்​கழகம் வெளி​யிட்ட பதி​வு: கூடங்​குளம் அணுமின் நிலை​யத்​தின் 5-வது...
‘கூட்டணி கட்சிகள் மீது பழி சுமத்தி, விமர்சித்துக் கொண்டே இருந்தால் திமுக இனி எப்போதுமே ஆட்சிக்கு வரமுடியாத நிலை ஏற்படும்’ என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள தவெக தலைவர் விஜய் முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் தீர்ப்பு. மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும்...
கும்​மிடிப்​பூண்டி அருகே புதுப்​பேட்​டை​யில் பாலியல் வன்​கொடுமை செய்து கொலை செய்​யப்​பட்ட 3 வயது பெண் குழந்​தை​யின் குடும்​பத்​துக்கு அரசு சார்​பில்​, ரூ.8 லட்​சம் நிவாரண நிதிக்​கான ஆணையை நேற்​று செயற்கை நுண்​ணறிவு துறை அமைச்​சர் குமார் வழங்​கி​னார். திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் தொழிற்​பேட்​டையையொட்​டி​யுள்ள புதுப்​பேட்டை பகு​தி​யில் கடந்த 14-ம் தேதி மாலை, வீட்டு வாசலில் விளை​யாடி கொண்​டிருந்த பிஹார் மாநில தம்​ப​தி​யின் 3 வயது பெண் குழந்தை திடீரென...
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு பொதுப்​பணித்​துறை அமைச்​சர் ஆதவ் அர்ஜுனா வழக்​கறிஞர் நோட்டீஸ் அனுப்​பி​யுள்​ளார். அமலாக்​கத் துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பை சுட்​டிக்​காட்​டி, ‘ரூ.258 கோடி மதிப்​பிலான போதைப் பொருள் கடத்​தலில் மூளை​யாக செயல்​பட்ட ஜான் பிரிட்​டோ, தவெக அரசின் பொதுப்​பணித்​துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா​வின் நெருங்​கிய உறவினர் என்ற அதிர்ச்​சி​யூட்​டும் உண்மை அம்​பலா​மாகி​யுள்​ளது’ என திமுக தலை​வர் ஸ்டா​லின், கட்​சி​யின் எக்ஸ் தள பக்​கத்​தில்...
தமிழகத்​தில் 2031-ம் ஆண்டுக்​குள் முதியோர் எண்​ணிக்கை அதி​கரித்​து, பணிபுரிவோரின் எண்​ணிக்கை குறை​யும் என நிதி அமைச்​சர் மரிய வில்​சன் வெளி​யிட்ட வெள்ளை அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. தமிழக நிதி அமைச்​சர் மரிய வில்​சன் வெளி​யிட்ட வெள்ளை அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த வெள்ளை அறிக்கை 2026-27-ம் ஆண்​டுக்​கான இடைக்​கால வரவு செலவு திட்ட மதிப்​பீடு​களை ஆய்வு செய்​கிறது. அதன்​படி, மாநிலத்​தின் மொத்த வரி வரு​வாய் ரூ.2,29,579 கோடி​யாக, அதாவது 19 சதவீத வளர்ச்​சி​யுடன் கணிக்​கப்​பட்​டுள்​ளது....
வீர தீரச் செயலுக்​காக இந்​திய அரசின் ‘கீர்த்தி சக்​ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீ​னாட்சி சுந்​தரத்தை தலை​மைச் செயல​கத்​துக்கு அழைத்து முதல்​வர் விஜய் பாராட்​டி​னார். தமிழக அரசு சார்​பில் அவருக்கு ரூ.48 லட்​சத்​துக்​கான காசோலையை வழங்கி கவுர​வித்​தார். தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீ​னாட்சி சுந்​தரம், இந்​திய ராணுவத்​தின் பீரங்கி படைப் பிரி​வில் பணி​யாற்றி வரு​கிறார். கடந்த 2024 டிச.19-ம் தேதி ஜம்மு -...
காலி மது பாட்​டில்​களை திரும்ப பெற, இயந்​திரத்தை பயன்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக, டாஸ்மாக் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். வனப்​பகு​தி​கள் மற்​றும் சுற்​றுலாத் தலங்​களில் காலி மது​பாட்​டில்​கள் வீசப்​படு​வ​தால், வனவிலங்​கு​கள் பாதிக்​கப்​படு​வது தொடர்​பான வழக்​கில், காலி மது​பான பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை நடை முறைப்படுத்த சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்​து, டாஸ்​மாக் நிர்​வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீல​கிரி​யிலும், பின்​னர், பல்​வேறு மாவட்​டங்​களி​லும் இந்த திட்​டத்தை அமல்​படுத்​தியது. இதற்​கிடையே, சென்னை உட்பட...
முதல்​வரும் தமிழக வெற்​றிக் கழக தலை​வரு​மான விஜய் - அவரது மனைவி சங்​கீதா இடையி​லான விவாகரத்து வழக்கு செங்​கை குடும்ப நல நீதி​மன்​றத்​தில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. இதில் இருதரப்​பினருக்​கும் முக்​கிய​மான உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​பட்​ட​தால் வழக்கு புதிய திருப்​பத்தை எட்​டி​யுள்​ளது. வழக்​கில் நேரில் ஆஜராவ​திலிருந்து விலக்கு அளித்​து, வீடியோ கான்​பரன்ஸ் மூலம் ஆஜராக அனு​மதி வழங்க வேண்​டும் என விஜய் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்த மனுவை நீதி​மன்​றம் ஏற்​றுக் கொண்டு...
கூடு​தல் விலைக்கு மது விற்​பனை செய்​த​தாக கடந்த 20 நாட்​களில் 200 பேர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ள​தாக டாஸ்மாக் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். தமிழகத்​தில் டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் மது பாட்​டில்​களுக்கு கூடு​தலாக பணம் வசூலிக்​கப்​படு​வ​தாக பல ஆண்​டு​களாக குற்​றச்​சாட்​டு​கள் இருந்து வரு​கிறது. முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்ற நாள் முதலே பலர் டாஸ்​மாக் கடைகளில் கூடு​தல்​ தொகை வசூலித்​தால் அதை வீடியோ பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டனர். மேலும், டாஸ்​மாக் நிர்​வாக​மும் கூடு​தல் விலைக்கு...
சென்​னை​யில் உள்ள ரெயின்போ குழந்​தைகள் மருத்​து​வ​மனை​களில் பச்சிளம் குழந்​தைகள் மற்​றும் சிறு​வர்​களின் சுவாச பிரச்​சினை​கள், தூக்​கக் குறை​பாடு​களுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. செவித்​திறன் இழப்​பு, சுவாச பிரச்​சினை​கள், தூக்​கக் குறை​பாடு போன்ற பாதிப்​பு​கள் குழந்​தைகளின் பேச்​சுத்​திறன், கல்​வி, வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்​கின்​றன. இத்​தகைய சிக்​கல்​களுக்கு ஆரம்​பக்​கட்​டத்​திலேயே முற்​றுப்​புள்ளி வைக்​கும் நோக்​கில், சென்னை கிண்​டி, அண்​ணாநகர் மற்​றும் சோழிங்​கநல்​லூரில் இயங்கி வரும் ரெயின்போ குழந்​தைகள் மருத்​து​வ​மனை​களில், பச்​சிளம் குழந்​தைகள் மற்​றும் சிறு​வர்​களுக்​கான...