“முருகனுடன் முதல்வர் விஜய்யை நான் ஒப்பிடவில்லை” – புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்

0
19

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் முருகன் குறித்து பாடியது சர்ச்சையான நிலையில், விளக்கம் தெரிவித்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது குறித்த வீடியோவில், “திருச்செந்தூரில் நடந்த இசைக் கச்சேரியில் நான் பாடிய பாடலை குறை சொல்லி பலரும் என்னைத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் திட்டுகின்ற அளவிற்கு நான் எதுவும் பாடவில்லை. திட்டுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. பாராட்டுகின்ற நீங்கள் தானே திட்டுகிறீர்கள்.

ஆனால் எதற்காகத் திட்டுகிறோம் என்று தெரிந்து திட்ட வேண்டும். நான் பாடிய பாடலில் எந்தக் குறையும் இல்லை. நான் பாடியது இதுதான். ‘நம் தமிழக முதல்வர் போல்’ அங்கே கமா இருக்கிறது. நம் தமிழக முதல்வர் போல், வேலெடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டார்.

‘யார் வேண்டிக்கொண்டால்?’, “நம் தமிழக முதல்வர் போல் வேண்டிக் கொண்டால்”. யாரிடம்?, “வேலெடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டால், வெற்றி நிச்சயம் உண்டு” (இப்பொழுது புரிகிறதா?)… யாருக்கு வெற்றி நிச்சயம் உண்டு?“நம்முடைய தமிழக முதல்வர் வேண்டிக்கொண்டது போல் நாமும் வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு” என்று சொல்லி இருக்கிறேன்.

வேலெடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டும் வரம் கேளுங்கள்; வெற்றி உண்டு பாருங்கள். (இப்பொழுது புரிகிறதா?…) அவரை நான் சாட்சியாகச் சொல்லி இருக்கிறேன் வெற்றி எப்படியும் நிச்சயம்; அதற்கு ஒரு சாட்சி வேண்டும். “நீங்களும் வேண்டுவதைக் கேட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டு,” என்று சொல்லிருக்கிறேன்.

இதில் என்ன குறை இருக்கிறது? எல்லோரும் சேர்ந்து என்னைத் திட்டுகிறீர்கள். முருகனுக்கு ஏராளமான பாடல்கள் நான் பாடியிருக்கிறேன். தமிழ் அறிந்த நான் இதில் பிழை செய்வேனா?. முருகனுடன் ஒப்பிட்டுப் பாடி இருக்கிறேன் என்று சொல்கிறார். எங்கே ஒப்பீடு இருக்கிறது. சாட்சியாகத்தான் நான் அவரை வைத்திருக்கிறேன்.

முருகனுடன் நான் ஒப்பிடவில்லை. ஆகவே முருகப் பெருமானுடைய அருள், பேரருள் அதற்கு நிகர் எதுவும் கிடையாது. அவருக்கு நிகர் யாருமில்லை. ஆகவே இதைப் புரிந்து கொள்ளுங்கள் நான் யாரையும் ஒப்பிடவோ யாரையும் குறை சொல்லவோ இல்லை. முருகப் பெருமானைப் பாடி இருக்கிறேன். அவ்வளவுதான். இதை அறிந்துகொண்டு மேற்கொண்டு மேற்கொண்டு திட்டுவதை விட்டுவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here