சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கம்

0
11

சூரசம்ஹாரத்தை முன்​னிட்டு தமிழகம் முழு​வதும் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​வ​தாக அரசு விரைவு போக்​கு​வரத்து கழகம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வார விடு​முறை மற்​றும் சூரசம்​ஹாரத்தை முன்​னிட்டு பயணி​களின் நலன் கருதி கடந்த 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

அதன்​படி, சென்னை கிளாம்​பாக்​கத்​தில் இருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, நெல்​லை, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு இன்று 525 பேருந்​துகள் இயக்​கப்படுகின்றன.

கோயம்​பேட்​டில் இருந்து நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர், பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு 40 பேருந்​துகளும் இயக்​கப்படுகின்றன. மேலும், பெங்​களூரு, திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோவை ஆகிய இடங்​களில் இருந்​தும் பல்​வேறு இடங்​களுக்கு 50 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்படுகின்றன.

மாதவரத்​தில் இருந்து கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், வேலூர், ஓசூர் மற்​றும் புதுச்​சேரி ஆகிய இடங்​களுக்கு 55 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்படுகின்றன.

மேலும், நாளை சொந்த ஊர்​களில் இருந்து சென்னை மற்​றும் பெங்​களூரு திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவைக்​கேற்ப அனைத்து இடங்​களில் இருந்து 545 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன. இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

சூரசம்ஹாரத்தை முன்​னிட்டு சென்னை எழும்​பூர் – திருச்​செந்​தூர் இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: சென்னை எழும்​பூர் – திருச்​செந்​தூர் (06007) அதி​விரைவு சிறப்பு ரயில், நவ.14-ம் தேதி (இன்​று) மாலை 4.10 மணிக்கு எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் இருந்து புறப்​பட்​டு, தாம்​பரம், செங்​கல்​பட்​டு, மேல்​மரு​வத்​தூர், விழுப்​புரம், விருத்​தாச்​சலம், அரியலூர், ஸ்ரீரங்​கம், திருச்​சி, திண்​டுக்​கல், மதுரை, விருதுநகர், சாத்​தூர், கோவில்​பட்​டி, நெல்லை வழி​யாக மறு​நாள் (15-ம் தேதி) அதி​காலை 4 மணிக்கு திருச்​செந்​தூர் சென்​றடை​யும்.

மறு​மார்க்​க​மாக, திருச்​செந்​தூர் – சென்னை எழும்​பூர் (06008) அதி​விரைவு சிறப்பு ரயில் நாளை (15-ம் தேதி) இரவு 10.30 மணிக்கு திருச்​செந்​தூரில் இருந்து புறப்​பட்டு நவ.16-ம் தேதி மதி​யம் 12 மணிக்கு சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யம் வந்​தடை​யும்​. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here