நாமக்கல்லில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு 100% வாய்ப்பு இல்லை: முட்டைக் கோழி பண்ணையாளர்கள் உறுதி

0
6

நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பண்ணைகளில் 10 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் மூலம் தினமும் 8 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கும், தமிழகம் முழுவதும், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் சில வாரங்களுக்கு முன்பு பறவைக் காய்ச்சல் பாதிப்பால் ஆயிரக்கணக்கான கறிக்கோழிகள் இறந்தன.

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கச் செயலர் சுந்தரராஜன் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்தில் உயிரி பாதுகாப்பு முறையில் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு பறவைக்காய்ச்சல் நோய் தாக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழங்கும் ஆலோசனைகளின்படி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படுவதுடன், நுழைவாயிலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் உள்ள பாதை வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால், நாமக்கல் மண்டலத்தில் இதுவரை கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதில்லை.

குறிப்பாக, முட்டையினக் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாது. எனவே, கோழிப் பண்ணையாளர்களும், பொதுமக்களும் அச்சப்படத் தேவையில்லை, என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here