சின்னசேலத்தில் சோகம்: ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

0
19

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் சின்​ன​சேலம் அருந்​ததி​யர் தெரு​வைச் சேர்ந்​தவர் தங்​கமணி. இவரது மகன்கள் இமானுவேல் (11), சாம் ஆபிரகாம் (7). இரு​வரும் தனியார் பள்​ளி​யில் 5 மற்​றும் 3-ம் வகுப்பு படித்து வந்​தனர். போயர் தெரு​வைச் சேர்ந்​தவர் மணிகண்​டன் மகன் ராஜா (13). அங்​குள்ள அரசுப் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வந்​தார். நண்​பர்​களான மூவரும், தங்​களது வீட்​டின் அருகே உள்ள காலி இடத்​தில் நேற்று முன்​தினம் பிற்​பகலில் விளை​யாடினர். பின்​னர் 3 சிறு​வர்​களை​யும் காணவில்லை.

இந்​நிலை​யில் சின்​ன​சேலம் அருகே நயினார்​பாளை​யம் சாலை​யில் உள்ள தோட்​டப்​பாடி ஏரி​யில் 3 சிறு​வர்​களின் உடல்​கள் மிதப்​பது நேற்று காலை தெரிய​வந்​தது. போலீ​ஸாரும் தீயணைப்​புத் துறை​யினரும் விரைந்து வந்து. ஏரி​யில் மிதந்த 3 சிறு​வர்​களின் உடல்​களை​யும் மீட்டு, பிரேத பரிசோதனைக்​காக, கள்​ளக்​குறிச்சி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here