நட்​சத்​திர பேச்​சாளர்​கள் பட்​டியலில் இருந்து கூட்​டணி கட்​சித் தலை​வர்​களின் பெயர்​களை தவெக நீக்​கி​யுள்​ளது. தமிழகத்​தில் காலி​யாக உள்ள மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய இரு சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கு அக்டோபர் 6-ல் இடைத்​தேர்​தல் நடக்கிறது. இதற்​கான வேட்​புமனுத் தாக்​கல் நிறைவடைந்​து, இறுதி வேட்​பாளர்​களும் இறுதி செய்​யப்​பட்​டு, அனல் பறக்​கும் பிரச்​சா​ரம் நடை​பெற்று வரு​கிறது. இந்த தேர்​தலில் தவெக, திமுக, அதி​முக, நாம் தமிழர், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் என 5 முனைப் போட்டி நில​வு​கிறது. தேர்​தல்...
நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் குறை​பாடு​கள் இருப்​பின் வாட்​ஸ்​அப் எண் மூலம் புகார் அளிக்​கலாம் என்று கூட்​டுறவுத் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து கூட்​டுறவுத் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக விவ​சா​யிகளின் நலன் கருதி நெல்​லுக்​கான ஊக்​கத்​தொகை​யாக சன்​னரக நெல் குவிண்​டால் ஒன்​றுக்கு ரூ.156-ல் இருந்து ரூ.289 ஆகவும், பொதுரக நெல் குவிண்​டால் ஒன்​றுக்கு ரூ.131-ல் இருந்து ரூ.159 ஆகவும் உயர்த்தி வழங்​கப்​படும் என சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் அறி​வித்​தார். அதன்​படி...
‘பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட தவெக அரசு முயன்றால், மீனவர்களுடன் இணைந்து திமுக மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்’ என மு.க.ஸ்டாலின் எச்சரித் துள்ளார். சென்னை பட்டினப்பாக் கத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்டவுள்ள பகுதியில் உள்ள அனைத்து மீனவர் சங்க நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேற்று சந்தித்தனர். அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்...
அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய காபி நிறுவனமான ‘ஸ்டார்பக்ஸ்’, 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை...
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில்...
டெங்கு காய்ச்​சலில் அண்ணா பல்​கலைக்​கழக மாணவர் உயி​ரிழந்த சம்​பவத்தை தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் அனைத்து கல்​லூரி​கள், மற்​றும்பல்​கலைக்​கழகங்​களை தூய்​மை​யாக வைத்​திருக்க உத்​தர​விடப்​பட்​டிருப்​ப​தாக உயர்​கல்வி அமைச்​சர் பி.​விஸ்​வ​நாதன் தெரி​வித்​தார். கொரிய குடியரசின் கல்வி அமைச்​சகம், சர்​வ​தேச கல்விக்​கான தேசிய நிறு​வனம், சென்​னை​யில் உள்ள கொரிய துணை தூதரகம் சார்​பில் ‘ஸ்​டடிஇன் கொரி​யா’ உயர்​கல்வி கண்​காட்சி ராஜா அண்​ணா​மலை புரம் லீலா பேலஸ் ஹோட்​டலில் நேற்று நடந்​தது. 12 கொரிய பல்​கலைக்​கழகங்​கள் பங்​கேற்ற...
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் 1,562 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சிலை கரைப்பின் இறுதி நாளான நேற்று சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...
இடைத்​தேர்​தலில் ஆட்​சி​யாளர்​களுக்கு சரி​யான தண்​டனை வழங்க வேண்​டும் என எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். பூந்​தமல்லி நகர இளைஞரணி அமைப்​பாளர் முகமது ராஷிக் - மரி​யம் பாத்​திமா ஆகியோரின் திரு​மணம் வேலப்​பன்​சாவடி​யில் நேற்று நடை​பெற்​றது. எதிர்க்​கட்​சித் தலை​வரும், திமுக இளைஞரணி செய​லா​ள​ரு​மான உதயநிதி ஸ்டா​லின் திரு​மணத்தை நடத்தி வைத்து மண மக்​களை வாழ்த்​தி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: இஸ்​லாமியர்​களுக்​கும் திமுக​வுக்​கு​மான உறவு காயிதே மில்​லத் காலத்​தில் உரு​வானது. இந்த உறவு...
செங்​கல்​பட்டு மாவட்​டம், மதுராந்​தகம் சட்​டப்​பேரவை இடைத்​தேர்​தலில் தமிழக வெற்​றிக் கழக வேட்​பாள​ராக மரகதம் குமர​வேல் போட்​டி​யிடு​கிறார். இவரை ஆதரித்​து, அக்​கட்​சி​யினர் தலை​வரும் தமிழக முதல்​வரு​மான விஜய், வரும் 25-ம் தேதி அச்​சிறுப்​பாக்​கம் பகு​தி​யில் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட​வுள்​ள​தாக தெரி​கிறது. இதற்​காக, அச்​சிறுப்​பாக்​கம் தேசிய நெடுஞ்​சாலை அருகே உள்ள வஜ்ரகிரி மலை அடி​வாரத்​தில் மேடை அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இங்கு மேடை அமைப்பதற்காக, தரை சமப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....
கோவையில் மோசமான வானிலையால் அமைச்சர் வன்னியரசு வந்த விமானம் மதுரையில் தரை இறங்கியது. தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, சேலத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்வுக்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு தனியார் விமானத்தில் பயணிகளுடன் வந்தார். ஆனால் கோவையில் மோசமான வானிலை நிலவியதால் கோவை விமான நிலையத்தில் அவர் வந்த விமானம் தரை இறக்கப்படவில்லை. தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தல்படி, வானத்தில் வட்டமடித்தபடி இருந்தது.இதனால் பயணிகள்...