ஆர்எஸ்எஸ் சார்பில் ‘கூடுவோம் கூட்டுவோம்’ நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் பல்வேறு துணை அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளில் உள்ள அனைவரும் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து பங்கேற்கும் வகையில் ‘கூடுவோம் கூட்டுவோம்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ‘கூடுவோம் கூட்டுவோம்’ நிகழ்ச்சி நாடு முழுவதும் நாளை (டிச.1) நடைபெற உள்ளது.
தமிழகத்தில் வார்டு வாரியாக நடைபெறும் இந்த...
அரசு மருத்துவமனைகளில் 2,553 மருத்துவர் காலியிடங்களை நிரப்ப ஜன.5-ம் தேதி தேர்வு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
admin - 0
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் ஜன.5-ம் தேதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை வரும் ஜன.5-ம் தேதி மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 23,971 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு முடிந்த பிறகு பணிநியமன ஆணைகள்...
கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கான முதல்வரின் கணினித் தமிழ் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல நூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகிறது.
தகவல் தொழில் நுட்ப...
மழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்: மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள்
admin - 0
மழைக் காலங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரமான கைகளால் மின் ஸ்விட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார ஸ்விட்சுகள் எதையும் இயக்கக் கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். நீரில் நனைந்த பேன்,...
புதுச்சேரி அருகே இன்று புயல் கரையை கடக்கிறது: மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்
admin - 0
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்...
புயல் இன்று கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்தப்பட கூடாது. ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.
புயல் கரையை கடக்கும்போது ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். கனமழை, புயல் காற்றுக்கு...
சென்னை மாநகராட்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் 22 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
120 சமையல் கூடங்களும், போதிய மளிகை மற்றும் காய்கறிகளுடன் தயாராக உள்ளன. மாநகராட்சியின் 36 படகுகள் உள்பட 103 படகுகள், தேவையான இடங்களில் தயாராக...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் ஜாமீன் மனுவுக்கு டிச.2-க்குள் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். பின்னர் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமும் கைது செய்யப்பட்டார்.
சென்னை சிபிஐ சிறப்பு...
சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் சிலர் ரயில் பயணத்தின் போது கற்பூரம் ஏற்றி வைத்து பூஜை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த...
அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை
admin - 0
போலீஸாருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது தொடர்பாக டிசம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்தில் போலீஸார் அலுவல் ரீதியாக பயணம் செய்வதற்கு எந்தவொரு அடையாள அட்டையும் வழங்கப்படாமல் இருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக, அரசு பேருந்து நடத்துநர்களுக்கும்,போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
இதை கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளில்...










