Google search engine
முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை கைப்பற்ற சதி நடப்பதாகவும், அதை கண்டித்து நாடு முழுவதும் விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசு, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான விரோத செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் குழப்பத்தை ஏற்படுத்தினர். காஷ்மீருக்கு இருந்த சிறப்பு...
குரு சிஷ்யா உறவு முறை தான் இசைக்​கலைஞர்​களை​யும், கலையை​யும் என்றென்​றும் உயிரோட்​டமாக வைத்​திருக்​கிறது என சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் பெரு​மிதம் தெரி​வித்​தார். சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் மற்றும் அவரது சகோதரியான பெங்​களூரு ஆத்மாலயா அகாட​மி​யின் நிர்​வாகியான பரத நாட்​டியக் கலைஞர் டாக்டர் பத்மஜா வெங்​கடேஷ் சுரேஷ் ஆகியோரது தந்தை மறைந்த கூத்து கலைஞர் சாக்​யார் ராஜன் நினைவாக இசைக்​கலைஞர்​களுக்கு விருது வழங்​கும்...
தமிழகத்​தின் மொத்த மின்​நுகர்வு கடந்த 2023-24-ம் ஆண்டில் 742 கோடி யூனிட் அதிகரித்​துள்ளது. தமிழகத்​தில் வீடு, வணிக நிறு​வனங்​கள், தொழிற்​சாலைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவு​களுக்​கும் மின்​விநி​யோகம் செய்​யும் பணியை தமிழக மின்​வாரியம் மேற்​கொண்டு வருகிறது. மாநிலம் முழு​வதும் தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்மின்​சாரம் பயன்​படுத்​தப்​படு​கிறது. இந்த மின்​நுகர்வு கடந்த ஏப்ரல் 30-ம் தேதி 45.43 கோடி யூனிட்டாக அதிகரித்​தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது. இதற்​கிடையே, கடந்த ஆண்டில்...
சென்னை மாநகரப் பகுதியில் ஃபெஞ்சல் புயலால் கனமழை பெய்ததால் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் நேற்றும் தீவிரமாக மேற்கொண்டது. பட்டாளம் பகுதியில் 2 நாட்களில் மழைநீரை வடிய செய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. அவற்றை மாநகராட்சி நிர்வாகம்...
எம்சாண்ட், ஜல்லி போன்றவற்றின் விலை உயர்வை திரும்பப் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் சுமார் 450 கிரசர்களுக்கு எம்.சாண்ட், பி.சாண்ட் என்னும் செயற்கை மணல் உற்பத்தி செய்து விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் 2000-க்கும் மேற்பட்ட கிரசர்கள்...
மக்கள் நல அரசு என்று சொல்வதற்கான தகுதியை தமிழக அரசு இழந்து வருகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது சமூக வலைதள பதிவு: ஓய்வு பெற்றவர்களின் அகவிலைப்படி உயர்வு வழக்கில் கோவை அலுவலர் சங்கம் பெற்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியை அரசு தரப்பு...
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதித்துவிட்டதால் பாம்பன் பாலத்தில் விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார். சிவகங்கை ரயில் நிலையத்தில் நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா, கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா, முதுநிலை நிலைய அதிகாரி முருகன் உடனிருந்தனர். பின்னர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதி மேம்படுத்தப்பட்டு...
அரசின் வாக்குறுதி மற்றும் மழை வெள்ள பாதிப்பு ஆகியவற்றால் வருவாய்த்துறை அலுவலர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் எம்.பி.முருகையன், பொதுச்செயலாளர் சு.சங்கரலிங்கம் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கடலோர மாவட்டங்களில் மழை...
அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ. 1,100 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதன்மூலம் மக்களின் வரிப்பணம் வீணாகுவதாக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மணல் குவாரிகளில் நிர்ணயி்த்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளியதன் மூலம் கிடைத்த தொகையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அதன்...
வங்கதேச இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் டிச.4-ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. வங்கதேச இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து, தமிழகத்தில் அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க கோரி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் நேற்று மனு அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:...