திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி(78). இவரது மனைவி அலமாத்தாள்(75). இவர்களது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை மர்ம கும்பல் கடந்த 28-ம் தேதி இரவு கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 8 பவுன் நகையை திருடிச் சென்றது.
இந்நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவின் பேரில், டிஐஜி சரவணசுந்தர் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், வழக்கில் பெரியதாக எவ்வித முன்னேற்றமும்...
திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், வ.உ.சி. நகர் 11-வது தெருவில் வசித்து வந்த .ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது 01-12-2024 அன்று மாலை சுமார் 4.00...
திருவண்ணாமலை மண் சரிவு பேரிடருக்கு தீர்வு என்ன என்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக, திங்கள்கிழமை மாலை தி.மலையில் நடந்த மீட்புப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஃபெஞ்சல் புயலால்,...
உதகையில் உள்ள கர்நாடக அரசுக்குச் சொந்தமான தோட்டக்கலைத் துறைப் பூங்காவில் முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கர்நாடக மற்றும் தமிழக முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சுற்றுலாத் தலமான உதகைக்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு...
நூற்றாண்டு பழமைவாய்ந்த மலை ரயிலைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 பேர், ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்தி குன்னூருக்கு சிறப்பு மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டுகளைக் கடந்தும் பொலிவு மாறாமல் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உள் நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த மலை ரயிலில் பயணிக்க செய்ய முன்பதிவு செய்து காத்திருந்து, ஆர்வத்துடன் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில்,...
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசை கோரியது திமுக தான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: மதுரையில் டங்ஸ்டன் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சுரங்கம் அமைக்க, தமிழக அரசு, மத்திய அரசின் அனுமதியைக் கோரி இருப்பதாகவும், தமிழக கனிம வளத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக கடந்த 2023-ம் ஆண்டு ஊடகத்தில் செய்திகள்...
திண்டிவனம் அருகே பாதிராபுலியூரில் புயலால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், போர்வை, காய்கறி உள்ளிட்டவற்றை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வழங்கினார். அதேபோல, மயிலம் மற்றும் திண்டிவனத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எனது குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் உரிய பதில் அளிப்பதில்லை” என்றார்.
பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய துணை முதல்வர்
admin - 0
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கடலூர் மாவட்டத்தில் 17 நிவாரண...
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெண் ஊழியர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
admin - 0
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களி்ல் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதனால், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கான தண்டனை விவரங்கள், மக்கள் பார்வையில் தெரியும்படி காட்சிப்படுத்துதல்...
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும்: இபிஎஸ், சீமான் வலியுறுத்தல்
admin - 0
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,...










