ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மாவட்டத்தில் 240 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத் தின் கட்டுப்பாட்டில் உள்ள 782 ஏரிகளில் 48 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 505...
கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரம்: அவசர சிகிச்சை பிரிவில் சேவையாற்ற உத்தரவிட்டு 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
admin - 0
மாநிலக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேவையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரி மாணவரான திருத்தணியைச் சேர்ந்த சுந்தரை, கடந்த அக்.4-ம் தேதியன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கினர். சுந்தரை அவர்களிடமிருந்து மீட்ட...
அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை: விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் கோரிக்கை
admin - 0
ஃபெஞ்சல் புயல் காரணமாக மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முழுமையாக ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக ஆகியன வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்வாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன்: டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன. பெரம்பலூர், அரியலூர்...
முதுநிலை மருத்துவ படிப்புகளில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் சேருவதற்காக போலி தூதரக சான்றிதழ்: 46 மருத்துவர்கள் மீது புகார்
admin - 0
முதுநிலை மருத்துவ படிப்புகளில் என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் சேருவதற்காக போலி தூதரக சான்றிதழ் அளித்த 46 மருத்துவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இருக்கும் 2,294 இடங்கள், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நிரப்பப்படுகிறது. அவற்றில் 1,094 இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மீதமுள்ள 50 சதவீதம்,...
தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஜன.29 முதல் பிப்.1-ம் தேதி வரை மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நடைபெறுகிறது.
பங்கேற்க விரும்புவோர் டிச.9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் அனைத்து தபால்தலை சேகரிப்பு அலுவலகங்களில் கிடைக்கும். மேலும், https://tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் வழக்கில் ஜாபர் சாதிக், அவரது சகோதரருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை கடும் ஆட்சேபம்
admin - 0
உணவுப் பொருட்கள் பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு போதைப் பொருட்களை கடத்திய ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்து சென்னை சிபிஐ நீதிமன்றத்தி்ல் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26-ம்...
சபரிமலையில் ஏற்கெனவே பதிவு செய்த நேரத்தில் சென்றால், சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.
தேவையற்ற நெரிசலை தவிர்க்க, தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கி உள்ளார். அதன் விபரம்:
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன வரிசைக்கான டிஜிட்டல் முன்பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு...
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வில், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 1,200 செவிலியர்களுக்கு நிரந்தர பணிக்கான ஆணை மற்றும் கரோனா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 963 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கான ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை...
அனைத்து மகளிர் குழு உறுப்பினர்களும் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயனடைய அறிவுறுத்தல்
admin - 0
அனைத்து மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2009-ல் ‘கலைஞர்’ காப்பீட்டுத் திட்டமாக தொடங்கப்பட்டது. இப்போது ஜனவரி 2022 முதல் 2027 வரையிலான திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் பணிபுரியும் மருத்துவக் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மூலம், மருத்துவக்...
24 வகையான சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை: விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய செயலிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு
admin - 0
சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக புதிய செயலிகள உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி நம்பகத்தன்மையற்ற சீனாவின் 'ட்ரூ காலர்' எனும் செயலிக்குப் பதிலாக புதிய செயலியை அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் செல்போன் மூலம் நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள் கடுமையாக இருந்தாலும் பெரும்பாலான குற்றங்கள் காவல்துறையின் கவனத்துக்கு கூட...










